இரண்டாம் உலகப்போரில் திரெசுடன் நகரம் மீதான குண்டுவீச்சுகள்

இரண்டாம் உலகப் போரின் போது 13 - 15 பிப்ரவரி 1945 நாட்களில் நாசி ஜெர்மனியின் சாக்சனி மாகாணத்தின் தலைநகரான டிரெஸ்டன் நகரத்தின் மீது ஐக்கிய இராச்சியம் 772 குண்டு வீச்சு போர் விமானங்களைக் கொண்டும் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் 527 போர் விமானங்களைக் கொண்டும் தாக்கி அழித்தது.[1] திரெசுடன் நகரத்தின் வான் வழியாக வான் படை போர் விமானங்கள் மூலம் 3,900 டன்களுக்கும் அதிகமான வெடிகுண்டுகள் [1] மற்றும் தீப்பற்றும் குண்டுகளையும் வீசினர். குண்டு வீச்சில் ஏறத்தாழ 22,700 முதல் 25,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[3][4] திரெசுடன் நகரம் முற்றிலும் சிதைந்து போனது. குண்டு வீச்சி தீயால் நகர மையத்தின் 1,600 ஏக்கருக்கும் அதிகமான (6.5 கிமீ2) நிலம் அழிந்தது.[2]

திரெஸ்டன் நகரம் மீதான் குண்டுவீச்சுகள்
இரண்டாம் உலகப் போர் பகுதி

குண்டு வீச்சால் உருக்குலைந்த திரெஸ்டன் நகரம், நாசி ஜெர்மனி
நாள் 13–15 பிப்ரவரி 1945
இடம் திரெசுடன், சாக்சனி மாகாணம், நாசி ஜெர்மனி
51°03′00″N 13°44′24″E / 51.05000°N 13.74000°E / 51.05000; 13.74000
  • பல மூலோபாய இடங்களை குறிவைத்து அழிக்கப்பட்டது
  • ஆயிரக்கணக்கான ஜெர்மானிய மக்கள் கொல்லப்பட்டனர்
  • நகர மையம் அழிக்கப்பட்டது.
  • ஜெர்மானியத் துருப்புகளின் நகர்வுகள் குறுகிய காலத்திற்கு தடுத்து நிறுத்தப்பட்டது.
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியத்தின் இராயல் வான் படை
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வான் படை
நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனியின் லூப்டுவாபே (வான் படை)
பலம்
  • 769 RAF குண்டு வீச்சு விமானங்கள்
  • 9 RAF நடுத்தர குண்வு வீச்சு விமானங்கள்
  • 527 ஐக்கிய அமெரிக்க வான் படையின் போயிங் B-17 அதிதிறன் குண்டு வீச்சு விமானங்கள்
  • 784 ஐக்கிய அமெரிக்காவின் P-51 மஸ்டாங் ரக போர் விமானங்கள்
  • 28 மெசர்ஸ்மிட் Bf 110 ரக இரவு போர் விமானங்கள்
  • விமான எதிர்ப்பு பீரங்கிகள்
இழப்புகள்
7 போர் விமானங்கள், (ஒரு B-17 மற்றும் 6 லான்செஸ்டர், விமானிகள் உள்பட) 22,700–25,000 பேர் கொல்லப்பட்டனர்
போர் விமானங்களின் குண்டுவீச்சில் உருக்குலைந்த திரெசுடன் நகரச் சதுக்கம், ஆண்டு 1945

இக்குண்டு வீச்சின் போது திரெசுடன் நகரத்தில் 100,000 முதல் 200,000 அகதிகள் இருந்தனர். மேலும் 1,858 உடல்கள் போரின் முடிவு மற்றும் 1966 க்கு இடையில் டிரெஸ்டனின் மறுகட்டமைப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு