இரண்டாம் செயவர்மன் (பரமார வம்சம்)

பரமார மன்னன்

}} இரண்டாம் செயவர்மன் ( Jayavarman II ; ஆட்சி. 1255-1274 கிபி), அல்லது செயசிம்மன் எனவும் அறியப்படும் இவர் மத்திய இந்தியாவிலிருந்த பரமார வம்சத்தின் அரசனாவார்.[1] இவர் தனது மூத்த சகோதரர் சைதுகிதேவனுக்குப் பிறகு மால்வாவை பகுதியில் ஆட்சி செய்தார்.

இரண்டாம் செயவர்மன்
மகாராசாதிராசா
மால்வாவின் அரசன்
ஆட்சிக்காலம்சுமார் 1255-1274பொ.ச.
முன்னையவர்சைத்துகிதேவன்
பின்னையவர்இரண்டாம் அர்ச்சுனவர்மன்
குழந்தைகளின்
பெயர்கள்
  • இரண்டாம் அர்ச்சுனவர்மன், இரண்டாம் போஜன், மகாலக்கதேவன்
பட்டப் பெயர்
"செயவர்மன்" அல்லது "செயசிம்மன்"
வம்சம்பரமாரர்
தந்தைதேவபாலன்
மதம்இந்து சமயம்

வரலாறு தொகு

இவரது காலத்திய பல்வேறு கல்வெட்டுகளில் "செயவர்மன்" அல்லது "செயசிம்மன்" என்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார். கிபி 1274 மாந்ததா செப்புத் தகடு கல்வெட்டில், இவர் "செயவர்மன்" எனவும் "செயசிம்மன்" எனவும் குறிப்பிடப்படுகிறார். கடந்த காலத்தில், செயவர்மனும் செயசிம்மனும் இரு வேறு நபர்களா என்ற சர்ச்சை வரலாற்றாசிரியர்களிடையே இருந்தது. [2] [3]

செயவர்மனின் பல கல்வெட்டுகள் அவர் மண்டப-துர்காவில் (இன்றைய மாண்டு ) தங்கியிருந்ததாகக் குறிப்பிடுகின்றன. செயவர்மனோ அல்லது அவரது முன்னோடியான சைதுகியோ பாரம்பரியமான பரமார தலைநகரை தார் நகரிலிருந்து மாண்டுவுக்கு கொண்டு சென்றிருக்கலாம். மாண்டு அவர்களுக்கு ஒரு சிறந்த தற்காப்பு நிலையை வழங்கியது. சுற்றியுள்ள மலைகளும், நர்மதா பள்ளத்தாக்கும் அவர்களை பாதுகாத்தது. அண்டை நாடுகளின் தாக்குதல் அச்சுறுத்தல்களின் காரணமாக இது நடந்திருக்கலாம். தில்லியின் சுல்தான் நசீர்-உத்-தினின் தளபதியான பால்பன் இந்த நேரத்தில் பரமாரப் பிரதேசத்தின் வடக்கு எல்லையை தாக்கி அதை கைப்பற்றினான். ஏறக்குறைய அதே நேரத்தில், தேவகிரியின் யாதவ மன்னர் கிருட்டிணன், குசராத்தின் வகேலா மன்னர் விசாலதேவன் ஆகியோரின் தாக்குதலையும் பரமாரர்கள் எதிர்கொண்டனர். [4]

செயவர்மனுக்குப் பிறகு அவனுடைய மகன் இரண்டாம் அருச்சுனவர்மன் ஆட்சிக்கு வந்தான். இவன் பலவீனமான ஆட்சியாளான இருந்தான். [5] சமசுகிருத மொழியிலும், நாகரி எழுத்துக்களிலும் செயவர்மன் ஆட்சியின் பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[3] [2]

சான்றுகள் தொகு

  1. Bhatia 1970.
  2. 2.0 2.1 Sircar 1959, ப. 146.
  3. 3.0 3.1 Bhatia 1970, ப. 155.
  4. Trivedi 1991, ப. 203.
  5. Majumdar 1977.

உசாத்துணை தொகு