இரண்டாம் பாலினம்

இரண்டாம் பாலினம் (The Second Sex) (பிரெஞ்சு மொழி: Le Deuxième Sexe) என்பது பிரெஞ்சு இருத்தலியலாளராகிய சோமோன் தெ பொவார் 1949 ஆம் ஆண்டில் எழுதிய நூலாகும். இந்நூலில் நூலாசிரியர் பெண்கள் வராற்று நெடுகிலும் நடத்தப்பட்ட்தைப் பற்றி எழுதியுள்ளார். இவர் 1945 முதல் 1949 வரை 14 மாதங்கள் ஆய்வு செய்து எழுதினார்.[3] இந்நூலை உண்மைகளும் புனைவுகளும் (Les faits et les mythes), வாழ்வின் பட்டறிவு (L'expérience vécue) என இரண்டு தொகுதிகளாக இவர் Les Temps modernes எனும் இதழில் வெளியிட்டார். [4][5] இது பொவாரின் பரவலாக அறியப்பட்ட இரண்டாம் அலைப் பெண்ணிய மெய்யியல் நூல்களில் சிறந்த ஒன்றாகும். இந்நூல் தான் இரண்டாம் அலைப் பெண்ணியத்தைத் தொடங்கிவைத்தது.[6]

இரண்டாம் பாலினம்
The Second Sex
First Editions
நூலாசிரியர்சீமோன் தெ பொவார்
உண்மையான தலைப்புLe Deuxième Sexe
நாடுபிரான்சு
மொழிபிரெஞ்சு
பொருண்மைபெண்களின் சூழல்
வெளியிடப்பட்டது1949
ஊடக வகைஅச்சு ஊடகம்
பக்கங்கள்இரு தொகுதிகள், 978 பக்கங்கள்[1][2]

நூற்சுருக்கம் தொகு

தொகுதி ஒன்று தொகு

பொவார் "பெண் என்றால் என்ன?" என வினவுகிறார்.[7]

பொவார் சிகுமண்டு பிராயிடு, ஆல்பிரெடு ஆடிலர்,[8] பிரெடெரிக் ஏங்கல்சு ஆகியோரின் பார்வைகளை மறுக்கிறார்.

பொவாரின் பார்வையின்படி பெண்களின் படிமலர்ச்சி இரண்டு காரணிகளால் ஏற்பட்டது. அவற்றில் ஒன்று சமூகப் பொருளாக்கத்தில் (உற்பத்தியில்) பெண்களின் பங்கேற்பு; மற்றது, இனப்பெருக்க அடிமைத் தனத்தில் இருந்தான விடுதலை.[9]

கிறித்துவம் பற்றி விவாதிக்கையில், செருமானிய மரபைத் தவிர பிற மரபுகளின் குருமார் பெண்களை அடிமைப் படுத்தினர் என வாதிடுகிறார்.[10]

தொகுதி இரண்டு தொகு

ஏற்பும் தாக்கமும் தொகு

இரண்டாம் பாலினம்முதல் பிரெஞ்சுப் பதிப்புப் படிகள் ஒரு வாரத்துக்குள் 22,000 அள்வுக்கு விற்றன.[11] இந்நூல் அதற்குப் பின்னர், 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.[12] வாட்டிகான் இந்நூலைத் தடைசெய்த நூற்பட்டியலில் சேர்த்தது.[6] ஆல்பிரெடு கின்சுலே எனும் பாலியல் ஆய்வாளர் இரண்டாம் பாலினம் நூலை உய்யநிலைத் திறனாய்வுக்கு உட்படுத்தி, இது சிறந்த இலக்கிய வெளியீடெனக் கூறிவிட்டு, இது அறிவியலுக்கான முதன்மைத் தரவுகளையோ ஆர்வங்களையோ கொண்டிருக்கவில்லை எனவும் கூறுகிறார்.[13] பொவார் 1960 இல் இரண்டாம் பாலினம் நூல் "பெண்ணியச் சூழல் இன்றும் கூட, உலகின் அடிப்படைச் சிக்கல்களைத் தேடும் பணியைத் தவிர்க்கிறது" என்பதை விளக்கிய முயற்சியாகும் என வாதிடுகிறார். [14] இரண்டாம் பாலினம் நூலின் உளப்பகுப்பாய்வு எதிர்ப்பு, 1963 இல் பெண்ணியப் பூடகம்(மறைதெறிப்பு) நூலை இயற்றிய பேட்டி பிரீதான், 1969 இல் பெண்னிய அரசியல் எனும் நூலை இயற்றிய கேட் மில்லெத், 1970 இல் பெண்ணிய திருநங்கை எனும் நூலை எழுதிய கெர்மைப் கிரீர் போன்ற பின்வந்த பெண்ணியர்கள் அக்கோட்பாட்டை எதிர்க்கும் ஆர்வத்தைக் கிளர்ந்தெழ ஊக்கியது.[15] பெண்ணிய அரசியல் எனும் நூலெழுதிய மில்லெத், அதை எழுதுகையில் நான் பொவாருக்கு எவ்வளவு கடப்பாடுடையேன் என்பதை, இன்னமும் உணரமுடியவில்லை என1989 இல் கூறுகிறார்.[16]

நூலுக்கான தடை தொகு

பண்பாட்டுத் தாக்கங்கள் தொகு

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Simone de Beauvoir (1949) (in fr). Le deuxième sexe. NRF essais. 1, Les faits et les mythes [Facts and Myths]. Gallimard. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9782070205134. https://books.google.com/books?id=XUHaAAAAMAAJ. 
  2. Simone de Beauvoir (1949) (in fr). Le deuxième sexe. NRF essais. 2 L'expérience vécue [Experience]. Gallimard. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9782070205141. இணையக் கணினி நூலக மையம்:489616596. https://books.google.com/books?id=XUHaAAAAMAAJ. 
  3. Thurman, Judith (2011). The Second Sex. New York: Random House. பக். 13. https://archive.org/stream/1949SimoneDeBeauvoirTheSecondSex/1949_simone-de-beauvoir-the-second-sex#page/n1/mode/2up. 
  4. Beauvoir 2009, ப. Copyright page.
  5. Appignanesi 2005, ப. 82.
  6. 6.0 6.1 du Plessix Gray, Francine (May 27, 2010), "Dispatches From the Other", The New York Times, பார்க்கப்பட்ட நாள் October 24, 2011
  7. de Beauvoir, Simone (1953). The Second Sex. New York: Alfred A. Knopf. பக். xv-xxix. https://archive.org/details/secondsex00beau. 
  8. Beauvoir 2009, ப. 59.
  9. Beauvoir 2009, ப. 139.
  10. Beauvoir 2009, ப. 104–106, 117.
  11. Rossi, Alice S. (19 May 1988). The Feminist Papers: From Adams to de Beauvoir. Boston: Northeastern University Press. பக். 674. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55553-028-0. https://archive.org/details/feministpapersfr00ross/page/674. 
  12. The Book Depository. "The Second Sex (Paperback)". AbeBooks Inc. பார்க்கப்பட்ட நாள் October 21, 2017.
  13. Pomeroy, Wardell (1982). Dr. Kinsey and the Institute for Sex Research. New Haven: Yale University Press. பக். 279. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-300-02801-6. 
  14. Beauvoir, Simone de (1962). The Prime of Life. Cleveland: The World Publishing Company. பக். 38. https://archive.org/details/primeoflife00beau. 
  15. Webster, Richard (2005). Why Freud Was Wrong: Sin, Science and Psychoanalysis. Oxford: The Orwell Press. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9515922-5-4. https://archive.org/details/whyfreudwaswrong0000rich. 
  16. Forster, Penny; Sutton, Imogen (1989). Daughters of de Beauvoir. London: The Women's Press, Ltd. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7043-5044-0. 

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_பாலினம்&oldid=3848895" இலிருந்து மீள்விக்கப்பட்டது