நாளஞ்சார் அறுவை சிகிச்சை
நாளஞ்சார் அறுவை சிகிச்சை (Vascular surgery) நாளஞ்சார் அமைப்புகளின் (தமனிகள், சிரைகள், நிணநீர் நாளங்கள்) நோய்களை மருத்துவ சிகிச்சை, குறைந்தளவே-உட்புகும் செருகுழல் முறைமைகள், மற்றும் திறந்த அறுவை மீளமைப்பு மூலம் குணப்படுத்துகின்ற சிறப்பு அறுவை சிகிச்சை முறையாகும். இந்த சிறப்பு சிகிச்சை முறை பொது மற்றும் இதய அறுவை சிகிச்சைகளிலிருந்து கிளைத்தது. இந்த சிகிச்சையில், உடலின் மற்ற முதன்மை மற்றும் இன்றியமையா சிரைகளும் தமனிகளும் உள்ளடங்கியவை. திறந்த அறுவை முறைகளும், குருதிக்குழலுள் செருகுழல் செலுத்தி செய்யப்படும் முறைகளும் கையாளப்படுகின்றன. நாளஞ்சார் அறுவை வல்லுநர் அனைத்து நாளஞ்சார் அமைப்புகளின் நோய்களையும் கண்டறியவும் மேலாளவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இதயத்தினுள் உள்ள இரத்த நாளங்களிலும் மண்டையோட்டினுள் உள்ள நாளங்களிலும் இவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில்லை.
தொழில் | |
---|---|
பெயர்கள் | மருத்துவர், மருத்துவ வல்லுநர், அறுவை மருத்துவர் |
வகை | சிறப்பு |
செயற்பாட்டுத் துறை | மருத்துவம் |
விவரம் | |
தேவையான கல்வித்தகைமை | * எலும்பு மருத்துவர் (D.O.)
|
தொழிற்புலம் | மருத்துவமனைகள், மருத்துவச் சிற்றில்கள் |
சராசரி ஊதியம் | ▲ USD $480,000 |