இரத்தினபுரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இரத்தினபுரம் எனப்படுவது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை வட்டத்திற்குட்பட்ட அனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இங்கே முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது.
சேவைகள்
தொகுவிவசாயம்
தொகுநெல் ,தென்னை, வாழை ,மா, பலா, முந்திரி, பனை முதலியன இங்கு பயிரிடப்படும் முக்கியமான பயிர் வகைகள் ஆகும்.
கல்வி
தொகுஅரசு அங்கன்வாடி மற்றும் அரசு ஆரம்பப் பள்ளி முதலிய பாடசாலைகள் உள்ளன.
தபால்
தொகுஇங்கு அமைந்துள்ள தபால் நிலையம், திடல் பஞ்சாயத்திற்குட்பட்ட திடல், மேலத்திடல், தெற்குமேடு, நயினார்தோப்பு, கடம்படிவிளாகம் போன்ற கிராமங்களுக்கு தபால்சேவை செய்து வருகிறது.
போக்குவரத்து
தொகுஇங்கிருந்து மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலுக்குத் தமிழ்நாடு அரசு பேருந்துக் கழகப் பேருந்துகள் போக்குவரத்துச் சேவை செய்கின்றன.
சமயம்
தொகுஇக்கிராமத்தில் வசிப்போரில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களாகையால் இங்கு இரட்சணிய சேனை தேவாலயம் ஓன்று அமைந்துள்ளது.