இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில்

இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில் இலங்கையில் இரத்தினபுரி வரக்காகோட்ட வீதியில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் சபேஸ்வரர் என்றும், அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும்.

இவ்வாலயம் இரத்தினபுரி சைவபரிபாலன மகா சபையினரால் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயம் 1989ஆம் ஆண்டு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான காலஞ்சென்ற பிரதம குருக்கள் சிவஸ்ரீ குஞ்சிபாதக் குருக்கள் தலைமையில் பாலபஸ்தானம் செய்து வைக்கப்பட்டு புனருத்தாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன். 15 ஆண்டுகளிற்குப் பின் இப்பணிகள் பூர்த்தியடைந்தன.

இன்று இவ்வாலயம் விநாயகர், சுப்பிரமணியர் , நடராஜர், வைரவர், நவக்கிரக 58 பரிவாரங்களுடன் உள்ள ஓர் ஆலயமாகவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்றபின்னர் முதன்முறையாக 4 ஏப்பர் 2006ஆம் அன்று சுவாமி வெளிவீதி வலம் வந்து அடியார்களிற்கு அருள்பாலித்தார்.

இவ்வாயத்தில் முக்கிய தினங்கள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

ஆதாரங்கள்தொகு

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்