இரன் பகதூர் சிங்
இரன் பகதூர் சிங் (Ran Bahadur Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் [1] மற்றும் ஓர் அரசியல்வாதியாவார். [2] 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் மற்றும் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். [3] இரன் பகதூர் சிங் அர்ரையாயாவில் பல கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். [1] 1947 ஆம் ஆண்டில் தேசிய இடைநிலைக் கல்லூரியை [1] தொடங்கினார், இது அர்ரையாவின் முதல் மூத்த மேல்நிலைப் பள்ளியாகும். பசுத்தி மாவட்டத்தில் உள்ள பழமையான பள்ளிகளில் ஒன்றாகவும் இப்பள்ளி கருதப்படுகிறது.
இரன் பகதூர் சிங் Ran Bahadur Singh | |
---|---|
அர்ரைய்யா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1957 முதல் 1962 வரை | |
அர்ரைய்யா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1962 முதல் 1967 வரை | |
பின்னவர் | புத்தி ராம் |
மாநில சட்டமன்ற மேலவை, பசுத்தி | |
பதவியில் 1967 முதல் 1972 வரை | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1921 முரதிபூர், அர்ரைய்யா (மாவட்டம் - பசுத்தி) |
இறப்பு | 1983 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சரசுவதி சிங் |
பெற்றோர் | சிவ் அரக்கு சிங் (தந்தை) |
கல்வி | இளநிலை சட்டம் |
முன்னாள் கல்லூரி | பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
தேர்தல் வரலாறு
தொகுஇரன் பகதூர் சிங் 1957 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிராந்திய அரசியலில் நுழைந்தார். பசுத்தி மாவட்டம், அர்ரைய்யா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். [4] மாகாண காங்கிரசு குழு உறுப்பினராகவும் இருந்தார். 1957 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரையிலும் அர்ரைய்யா தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1967 ஆம் ஆண்டில், இரன் பகதூர் சிங் பசுத்தி சட்ட சபையிலிருந்து சட்டமன்றக் குழு உறுப்பினரானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "UP Legislative Assembly Member: Ran Bahadur Singh" (PDF).
- ↑ 2.0 2.1 "🗳️ Ran Bahadur Singh, Harraiya West Assembly Elections 1962 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties".
- ↑ "Uttar Pradesh 1962".
- ↑ "Uttar Pradesh Legislative Assembly". Archived from the original on 10 August 2019. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.