இரமேசு மிசுரா

இந்திய சாரங்கி இசைக்கலைஞர்

இரமேசு மிசுரா (Ramesh Mishra ( வாரணாசி, இந்தியா, 2 அக்டோபர் 1948 - நியூயார்க், அமெரிக்கா, 13 மார்ச் 2017) இவர் இந்தியாவின் சாரங்கி இசைக்கலைஞர் ஆவார்.

இவர். சாரங்கிக்கலைஞர்களின் குடும்பத்தில் இருந்து வந்தார். மேலும் இவரது உறவினர்களிடமிருந்து சிறு வயதிலிருந்தே இசையை படித்தார். ரவிசங்கரின் சீடராக இருந்த இவர் ஏராளமான பதிவுகளை செய்துள்ளார். இந்தியப் பாரம்பரிய இசையின் இவரது வாசிப்புக்கு மேலதிகமாக, இவர் அமெரிக்க ராக் இசைக்குழுவான ஏரோஸ்மித் (1997 இசைத்தொகுப்பான நைன் லைவ்ஸ் ) உடன் பதிவு செய்துள்ளார். 2008 இல் இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. [1]

இறப்பு

தொகு

மிசுரா புற்றுநோயால் 13 மார்ச் 2017 அன்று தனது 68 வயதில் நியூயார்க்கில் காலமானார். [2]

குறிப்புகள்

தொகு
  1. "SNA: List of Akademi Awardees - Instrumental - Sarangi". Sangeet Natak Akademi. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-07-02.
  2. https://timesofindia.indiatimes.com/city/kolkata/while-the-sarangi-gently-weeps/articleshow/57620782.cms

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமேசு_மிசுரா&oldid=3094368" இலிருந்து மீள்விக்கப்பட்டது