இரவாடுதல்
(இரவாடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரவாடுதல் என்பது இரவு வேளையில் சுறுசுறுப்பாக இயங்கி, பகலில் உறங்கும் ஒரு விலங்குப் பண்பினைக் குறிக்கும். இத்தகைய பண்புடைய விலங்குகள் இரவாடிகள் எனப்படும்.[1]
இரவாடும் விலங்குகள் கூர்மையான காதுகளையும் மோப்பத் திறனையும் கொண்டிருக்கும். இவற்றின் கண்கள் இருட்டில் பார்ப்பதற்கேற்ப தகவமைந்திருக்கும். பூனை, ஆந்தை, வவ்வால் முதலியன இரவாடும் விலங்குகளாகும். சில இரவாடிகள் பகலிலும் நன்றாகப் பார்க்க வல்லன (பூனை). சில இரவில் மட்டுமே நன்றாகப் பார்க்கும் திறன் பெற்றிருக்கும்.[2][3][4]
தகவமைப்பு
தொகுபாலை நிலங்களில் வாழும் விலங்குகளில் சில பகல் நேரத்தில் உள்ள மிகுந்த வெப்பத்தினால் ஏற்படும் உடல் நீரிழப்பைத் தவிர்க்க இரவாடுமாறு தகவமைப்பைப் பெற்றுள்ளன. இது தவிரவும் பல காரணிகள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ அடவியின் அந்திமக் காலம்? - உலகின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு கேமரா தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016
- ↑ Agee, H. R.; Orona, E. (1988). "Studies of the neural basis of evasive flight behavior in response to acoustic stimulation in Heliothis zea (Lepidoptera: Noctuidae): organization of the tympanic nerves". Annals of the Entomological Society of America 81 (6): 977–985. doi:10.1093/aesa/81.6.977. http://digitalcommons.unl.edu/cgi/viewcontent.cgi?article=1106&context=entomologyother.
- ↑ Hall, M. I.; Kamilar, J. M.; Kirk, E. C. (2012). "Eye shape and the nocturnal bottleneck of mammals". Proceedings of the Royal Society B: Biological Sciences 279 (1749): 4962–4968. doi:10.1098/rspb.2012.2258. பப்மெட்:23097513.
- ↑ Gerkema, Menno P.; Davies, Wayne I. L.; Foster, Russell G.; Menaker, Michael; Hut, Roelof A. (2013-08-22). "The nocturnal bottleneck and the evolution of activity patterns in mammals" (in en). Proceedings of the Royal Society B: Biological Sciences 280 (1765): 20130508. doi:10.1098/rspb.2013.0508. பன்னாட்டுத் தர தொடர் எண்:0962-8452. பப்மெட்:23825205.