இரவி சு. தவான்
இரவி சு. தவான் (Ravi S. Dhavan)(22 ஜூலை 1942 - 5 ஜனவரி 2016)[1] அல்லது இரவி சுவரூப் தவான் என்பவர் இந்திய நீதிபதி மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.[2] இவர் மேற்கு வங்கத்தின் 7வது ஆளுநரான நீதிபதி சாந்தி சுவரூப் தவானின் மகன் ஆவார்.[3]
பணி
தொகுதவான் 1942-ல் பிறந்தார். இவர் சட்டப் படிப்பினை முடித்த பின்னர் 1966-ல் உத்தரப் பிரதேச சட்டக் குழுவில் வழக்கறிஞராகச் சேர்ந்தார். தவான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சொத்து, வரிவிதிப்பு மற்றும் அரசியலமைப்பு பிரச்சனைகளில் வழக்காடத் தொடங்கினார். உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசின் மூத்த நிலை வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், 1986ஆம் ஆண்டு ஜனவரி 9 நாளன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவி ஏற்றார்.[4] தவான் சனவரி 2000-ல் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று, 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் பணி ஓய்வுபெற்றார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jan 9; 2016; Ist, 13:49. "Chief Justice Ravi S. Dhavan (Retd.) - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ Allahabad ), V. S. DATTA (Editor, N. I. P. "Goodbye Ravi Dhavan". Active India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2021-08-22. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
{{cite web}}
:|first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Late diplomat?s wife passes away". Hindustan Times (in ஆங்கிலம்). 2006-11-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
- ↑ "Former Judges of the High Court of Judicature at Allahabad and its Bench at Lucknow(1900-1990)". www.allahabadhighcourt.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
- ↑ "LIST OF RETIRED CHIEF JUSICE". patnahighcourt.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.