இரவுகள் உடையும்
இரவுகள் உடையும் என்பது திமுக அரசுக் காலத்தில் சாலைப் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டது பற்றிய ஆவணப்படம் ஆகும். இப் படத்தை மாதவராஜ் இயக்கி உள்ளார்.
வேலைநீக்கம் செலவினைக் குறைக்கும் எனக் கூறி நீக்கப்பட்டாலும், அது பொய்யானது என்றும் சட்டத்துக்குப் புறம்பானது என்று இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கிறது. வேலை நீக்கப்பட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் விரிவாக எடுத்துரைக்கிறது. உச்ச நீதிமன்றம் தொழிலாளர்களுக்கு சார்பாக தீர்ப்பு அளித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புகள்
தொகு- இரவுகள் உடையும் - விமர்சனம்