இராசகிரிக் கோட்டை

செஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த ஒரு கோட்டை

இராசகிரிக் கோட்டை ( Rajagiri Fortசெஞ்சிக் கோட்டையில் உள்ள மூன்று மலைக்கோட்டைகளில் ஒன்றாகும். இது கி.பி. 1200 இல் கட்டப்பட்டது. இராஜகிரி என்பதன் பொருள் மன்னன் மலை என்பதாகும்.[1] இது செஞ்சி கடைவீதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோட்டை கருங்கற்களால் கட்டப்பட்டது.  இந்தக்  கோட்டை வளாகத்தில்  உடற்பயிற்சிக் கூடம் , அரண்மனை தளம், பார்வையாளர் கூடம், மணிமாடம், களஞ்சியம்,  இந்தோ-இஸ்லாமிய பாணி கருவூலம், தானியங்கள் பாதுகாப்பு கட்டடம், யானைக் குளம் ஆகியவற்றுடன் மேற்கு நுழைவு வாயிலில், வேணு கோபாலசாமி கோவில், விஜயநகர மன்னர்கள் கட்டிய அரங்கநாதர் கோயில், கல்யாண மண்டபம், சதத்தல்லாகானின் பள்ளிவாசல் (1717-18), மகபத்கானின் பள்ளிவாசல் போன்றவையும் தொடர்ந்து நீர் வரக்கூடிய குளியல் தொட்டி, ஒரு பெரிய பீரங்கி, கோட்டை அருகே கோயிலைச் சேர்ந்த சக்கரக்குளம் (நீர்த்தேக்கம்) ஆகியவை உ்ள்ளன.

இராசகிரிக் கோட்டை
பகுதி: தமிழ்நாடு
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இராசகிரிக் கோட்டை
இராசகிரிக் கோட்டை is located in தமிழ் நாடு
இராசகிரிக் கோட்டை
இராசகிரிக் கோட்டை
வகை கோட்டை
இடத் தகவல்
நிலைமை சிதைந்த நிலை

மேற்கோள்கள்

தொகு
  1. South India Handbook By Roma Bradnock
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசகிரிக்_கோட்டை&oldid=3390444" இலிருந்து மீள்விக்கப்பட்டது