இராசசுதான் சர்வதேச நாட்டுப்புறக் கலைத் திருவிழா
இராசஸ்தான் சர்வதேச நாட்டுப்புறக் கலைத் திருவிழா (அல்லது ஜோத்பூர் நாட்டுப்புறக் கலைத் திருவிழா) (Rajasthan International Folk Festival) என்பது பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் கலைகளை ஊக்குவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மெஹ்ரன்கார்ஹ் கோட்டையில் நிகழ்த்தப்படும் வருடாந்திர இசை மற்றும் கலைத் திருவிழா ஆகும்.[1]
வரலாறு
தொகுஅக்டோபர் 2007 இல் மெஹ்ரான்கர் அருங்காட்சியக அறக்கட்டளை மற்றும் ஜெய்ப்பூர் விராசாத் அறக்கட்டளை இணைந்து இலாப நோக்கற்ற கூட்டாக இந்த விழா முதன்முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது.[1][2] திருவிழா ஆண்டின் பெளர்ணமியின் நாளுடன் பொருந்தக்கூடிய விதமாக (இது வட இந்தியாவில் ஷரத் பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது) தீர்மானிக்கப்படுகிறது. திருவிழாவின் தலைமை புரவலர் மகாராஜா காஜ் சிங் ஆவார். திருவிழா மெஹ்ரான்கர் கோட்டையிலும் அதைச் சுற்றியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி திட்டமிடல்
தொகுஇந்தியா மற்றும் உலகத்தைச் சேர்ந்த அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு திறந்த மேடை வழங்க இந்த விழா திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் ராஜஸ்தான் மற்றும் பிற இடங்களைச் சேர்ந்த சுமார் 250 இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.[3]
சர்வதேச கவனம்
தொகுஇந்த விழாவை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் "படைப்பாற்றல் மற்றும் சீரான வளர்ச்சிக்கான மக்கள் மேடை" என்ற அங்கீகாரத்தை அளித்து ஆதரிக்கிறது.[1][2] 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், சாங்லைன்ஸ் என்ற பருவ இதழ் இவ்விழாவினை சர்வதேச அளவில் சிறந்த 25 விழாக்களில் ஒன்றாகக் கருதியது.
2013 ஆம் ஆண்டு நிகழ்வு
தொகு2013 ஆம் ஆண்டு கலை விழாவில் கருப்பொருள் மெஹ்ரன்கர் கோட்டையின் பண்டைய வரலாறற்றை மையமாகக் கொண்டமைந்தது.[3] டைம் (இதழ்) இந்தக் கோட்டையை ஆசியாவின் சிறந்த கோட்டையாக தேர்வு செய்தது.[4] இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தான் ரூபாப் வாத்தியக் கலைஞர் தாவூத் கான் சடோசாய் கலந்து கொண்டார். மேலும் மார்வாரின் மங்கானியாரின் கலாச்சாரம் பற்றிய அமர்வுகள், தில்ஷாத் கானுடன் ராஜஸ்தானிய கலைஞர்கள் மற்றும் மனு சாவோ ஆகியவை அடங்கும். ராஜஸ்தானி, நோர்டிக், பிரித்தானிய, மேற்கு ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய கலைஞர்களிடையேயான பக்தி இசை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டு இசை நிகழ்வுகள் முதல், ஆவணப்படத் திரையிடல்கள் வரை, விழாவில் பலவிதமான நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. ஜாஸ் பாடகரான ஜெப் லாங் மற்றும் கிடார் இசைக்கலைஞரான ஆசின் லங்கா, தபேலா இசைக்கலைஞரான பாபி சிங் மற்றும் கர்த்தால் இசைக்கலைஞர் பங்கார் மங்கானியார் ஆகியோரைக் கொண்டு ஒரு இசைக்கதம்ப நிகழ்ச்சி போன்றவையும் நடத்தப்பட்டன. மேலும், 'ஜகாஜி மியூசிக்' மற்றும் 'பைதேசியா இன் பாம்பே' என்ற இரண்டு குறு ஆவணத்திரைப்படங்களும் திரையிடப்பட்டன.[5]
2015 ஆம் ஆண்டு நிகழ்வு
தொகுஜோத்பூர் ஆர்ஐஎஃப்எஃப் தனது ஒன்பதாவது நிகழ்வை அக்டோபர் 23 முதல் 27 வரை கொண்டாடியது. இந்த ஆண்டு கிராமி விருது வென்றவர்கள் வெளட்டர் கெல்லர்மேன் மற்றும் யோசி ஃபைன் ஆகியோர் தங்கள் இசைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.இராஜஸ்தான் நாட்டுப்புறக் கலைகள் மட்டுமல்லாது ஆப்பிரிக்க இசை, ஜாஸ் போன்றவைகளையும் கொண்டிருந்தது. இந்த விழாவானது மெஹ்ரான்கார் கோட்டையின் பல்வேறு முற்றங்களில் நடத்தப்பட்டது. முழு நிலவு நாளில் நிலவு உதயத்திலிருந்து நள்ளிரவைக் கடந்து சூரிய உதயம் வரை இசை மட்டுமே பார்வையாளார்களின் பேசுபொருளாக இருந்தது. இந்த நிகழ்வில் பிரேசில், பின்லாந்து, கானா, இசுரேல், இசுகாட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இசுபெயின் மற்றும் இந்திய இசைக்கலைஞர்கள் மற்றும் நிகழ்த்துக் கலை கலைஞர்கள் தங்கள் கலை வடிவத்தின் மூலமாக கலாச்சாரங்களின் சங்கமத்தை ஏற்படுத்தினர்.[6]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 UNESCO New Delhi. "UNESCO Partners the Second Rajasthan International Folk Festival RIFF 2008". பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
- ↑ 2.0 2.1 Jodhpur RIFF. "Jodhpur RIFF". Archived from the original on 2013-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
- ↑ 3.0 3.1 Rajesh, Suganyasree (2013-12-22). "Pinkcity Guide to Jaipur". Pinkcity.com இம் மூலத்தில் இருந்து 2014-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140320042043/http://www.pinkcity.com/jodhpur/riff/. பார்த்த நாள்: 2014-03-20.
- ↑ Krich, John. "Time best of asia". Time magazine இம் மூலத்தில் இருந்து 2014-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140320043756/http://content.time.com/time/specials/2007/best_of_asia/article/0,28804,1614524_1614473_1614445,00.html. பார்த்த நாள்: 2014-03-20.
- ↑ "Wild city music guide". wild city. 2013-10-21 இம் மூலத்தில் இருந்து 2014-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140320043910/http://www.thewildcity.com/EN/events.xhtml/event/4502-jodhpur-riff-1721-oct. பார்த்த நாள்: 2014-03-20.
- ↑ "Jodhpur RIFF: Presenting new form of music". NEWS 18. 2015-10-09 இம் மூலத்தில் இருந்து 2015-10-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151009180456/http://www.news18.com/news/rajasthan/jodhpur-folk-fest-presenting-new-forms-of-music-to-the-country-819835.html?utm_source=akmin-wsf-sts&utm_medium=cpc&utm_campaign=akmin-news18-English-rj&rgn=rj&wsf_iref=home-0-HP-SPT-State%20News. பார்த்த நாள்: 2015-10-09.