இராசசூயம்
இராசசூயம் என்பது அரசன் தன் நாட்டை விரிவுபடுத்தச் செய்யும் வேள்வி. வேள்வி என்பது பிறருக்குச் செய்யும் உதவி.
சங்கப் பாடல்களின் காலம் வேறு. சங்கப் பாடல்களைத் தொகுத்து அவற்றிற்குக் குறிப்பு தந்த காலம் வேறு. இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் சுமார் மூன்று நூற்றாண்டுகள்.
தொகுத்தவர் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று ஒரு மன்னனைக் குறிப்பிடுகிறார். ‘சூயம்’ என்னும் சொல் ‘சுழல்’ என்பதன் திரிபாக்கம்.
- வென்றோர் விளக்கம்
- இந்த வேள்வியைத் தொல்காப்பியம் வென்றோர் விளக்கம் எனக் குறிப்பிடுகிது.[1]
- இளம்பூரணர் இதற்குப் பதிற்றுப்பத்து, பாடல் 71-ஐ எடுத்துகாட்டாகத் தருகிறார். அந்தப் பாடல் பகைவர் நாட்டை வென்று திறை வாங்கிக்கொண்டு மீளும் போர்ச்செய்தியைக் கூறுகிறது.
- வென்ற நாட்டில் வெற்றித்தூண் நாட்டுவது வழக்கம். இந்தத் தூண் வென்றவர் யார் என விளங்கவைப்பதால் தோல்காப்பியர் இதனை வென்றோர் விளக்கம் என்கிறார்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ தொல்காப்பியம் புறத்திணையியல் 7