இராசா மன்சூர் அகமது

இந்திய அரசியல்வாதி

இராசா மன்சூர் அகமது ( Raja Manzoor Ahmad) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராசா மன்சூர் அகமது கான் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். சம்மு காசுமீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள கர்னா தொகுதியிலிருந்து சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [1] மக்கள் சனநாயகக் கட்சியின் உறுப்பினராக இவர் சம்மு காசுமீர் அரசியலில் ஈடுபட்டார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுச் சட்டமன்றத் தேர்தலில் இவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அரசியலில் குதிக்கும் முன் குப்வாரா மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். கர்னாவில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிதாக்குவதற்காக தாங்தார் குப்வாரா நெடுஞ்சாலையில் சாதனா சுரங்கப்பாதை அமைப்பதற்கான பிரச்சாரத்தை முன்னின்று நடத்தினார். [2] 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் தேதியன்று மக்கள் குடியரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சம்மு மற்றும் காசுமீர் அப்னி கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் தற்போது குப்வாரா மாவட்டத்தின் மாவட்ட தலைவராகவும் பணியாற்றுகிறார்.

இராசா மன்சூர் அகமது

மேற்கோள்கள் தொகு

  1. "Teetwal, Keran developed under Border Tourism". 12 May 2017. http://kashmirreader.com/2017/05/12/teetwal-keran-developed-border-tourism/. 
  2. Rashid, Hakeem Irfan (2019-02-12), "Residents of Karnah want LoC route opened", The Economic Times, ISSN 0013-0389, பார்க்கப்பட்ட நாள் 2023-12-02
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசா_மன்சூர்_அகமது&oldid=3838615" இலிருந்து மீள்விக்கப்பட்டது