குப்வாரா மாவட்டம்

சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம்

குப்வாரா மாவட்டம் (Kupwara District), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் அமைந்த வடக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் குப்வாரா நகரமாகும். இம்மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் ஆசாத் காஷ்மீரை எல்லையாக கொண்டுள்ளது. காஷ்மீர் சமவெளியில் வடமேற்கே, கடல் மட்டத்திலிருந்து 5300 அடி உயரத்தில் இமயமலையில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. மேலும் இம்மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை பாரமுல்லா மாவட்டம் சூழ்ந்துள்ளது. இம்மாவட்டம் அடர்ந்த காட்டுப் பகுதிகளைக் கொண்டது. இமயமலையில் உருவாகும் கிருஷ்ணகங்கா ஆறு இம்மாவட்டத்தின், கிழக்கு மேற்காக பாய்கிறது.

குப்வாரா மாவட்டம்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் குப்வாரா மாவட்டத்தின் அமைவிடம்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் குப்வாரா மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (குப்வாரா): 34°31′12″N 74°15′00″E / 34.52000°N 74.25000°E / 34.52000; 74.25000
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)
கோட்டம்காஷ்மீர் கோட்டம்
தலைமையிடம்குப்வாரா
அரசு
 • சட்டமன்றத் தொகுதிகள5 : கர்னா, குப்வாரா, லோலாப், ஹந்த்வாரா, லாங் கோட்
மக்கள்தொகை
 (2011)
 • Total8,70,354
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுJK-09B
இணையதளம்http://kupwara.gov.in/

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் ஹந்த்வாரா, கர்னா மற்றும் குப்வாரா எனும் மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் சொகம், தாங்தர், தீத்வல், ராம்ஹல், குப்வாரா, ராஜ்வர், கிரால்போரா, லாங்கேட், வாவூரா, டெரக்ஹம் மற்றும் கலாரூஸ் என பதின்னொன்று ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது.[1] ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியதில் பல ஊராட்சி மன்றங்கள் உள்ளது.

பொருளாதாரம்

தொகு

மாவட்டத்தின் பொருளாதாரம், வேளாண்மை மற்றும் கிராமத் தொழில்களையே நம்பியுள்ளது

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குப்வாரா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 8,75,564 ஆக உள்ளது.[2] மக்கள் தொகை அடிப்படையில் இம்மாவட்டம், இந்தியாவின் 640 மாவட்டங்களில் 470வது இடத்தில் உள்ளது. [2] மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 368 ஆக உள்ளது. பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 843 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 66.93 விழுக்காடாக உள்ளது.

அரசியல்

தொகு

குப்வாரா மாவட்டம் கர்ணா, குப்வாரா, லெலாப், ஹந்துவாரா மற்றும் லாங்கேட் என ஐந்து சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statement showing the number of blocks in respect of 22 Districts of Jammu and Kashmir State including newly Created Districts பரணிடப்பட்டது 2008-09-10 at the வந்தவழி இயந்திரம் dated 2008-03-13, accessed 2008-08-30
  2. 2.0 2.1 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. "ERO's and AERO's". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-10-22. பார்க்கப்பட்ட நாள் 2008-08-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்வாரா_மாவட்டம்&oldid=3550482" இலிருந்து மீள்விக்கப்பட்டது