இராசுதோவ் தொலைநோக்கி

இராசுதோவ் ஆய்வகம் (Razdow Laboratories, Inc). ஆத்திரியாவில் பிறந்த இயற்பியலாளர் டாக்டர் அடோல்ப் இராசுதோவால் (1908-1985) நிறுவப்பட்டது. செருமானிய இனத்தூய்மிப்பு வெளியேற்ற அகதியான அவர் ஜூலை 1946 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். 1960 ஆண்டுகளின் முற்பகுதியில், உலகெங்கிலும் உள்ள முதன்மைக் கண்காணிப்பு மையங்களில் தொடர்ச்சியான சூரிய கண்காணிப்புத் தொலைநோக்கிகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் நாசாவால்திராசுதோ ஆய்வகத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்தக் கருவிகள் சூரியனை வானத்தில் தானாகக் கண்காணித்து, நீரக-ஆல்ஃபாக்கதிர் கதிர்நிரலில் சூரிய வட்டின் தொலைக்காட்சிப் படங்களைப் பதிவுசெய்து அனுப்பும்.[1] நாசா விண்வெளி வீரர்கள், விரைவில் புவியைச் சுற்றியுள்ள விண்வெளியில் பயணிக்கவுள்ளனர். இவர்கள்சூரிய சுடருமிழ்வுகளுடன் தொடர்புடைய கதிர்வீச்சு புயல்களால் பாதிக்கப்படலாம், மேலும் இந்த தொலைநோக்கிகள் சூரியக் கரும்புள்ளிச் செயல்பாட்டை 24 மணி நேர கண்காணிப்பைச் செய்ய அமைக்கப்பட்டன. இவற்றில் சில தொலைநோக்கிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Hennessey, J. J. (1969). "Solar work at Manila observatory". Solar Physics 9 (2): 496–501. doi:10.1007/BF02391676. Bibcode: 1969SoPh....9..496H. 
  2. "History of the Razdow Telescope". National Centers for Environmental Information (in ஆங்கிலம்). Archived from the original on October 7, 2008. பார்க்கப்பட்ட நாள் 19 August 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசுதோவ்_தொலைநோக்கி&oldid=3939870" இலிருந்து மீள்விக்கப்பட்டது