இராசுமி வர்மா

இந்திய அரசியல்வாதி

இராசுமி வர்மா (Rashmi Varma) பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[2] இவர் 25 ஆகத்து 2014 முதல் பீகார் சட்டமன்றத்தில் நர்கதியாகஞ்ச் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2014 இடைத்தேர்தலில் பீகாரின் நர்கட்டியாகஞ்சு தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் நர்கட்டியாகஞ்சு முன்னாள் நகரத் தந்தையாக இருந்தார். இவர் 2020 தேர்தலில் நர்கட்டியாகஞ்சிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்ட வினய் வர்மாவைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.[3][4]

இராசுமி வர்மா
Rashmi Varma
பீகார்-சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்வினய் வர்மா
தொகுதிநர்கட்டியாகஞ்சு
பதவியில்
2014–2015
முன்னையவர்சதீஷ் சந்திர துபே]
பின்னவர்வினய் சர்மா
தொகுதிநர்கட்டியாகஞ்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சனவரி 1967 (1967-01-04) (அகவை 57)[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

அச்சுறுத்தல்கள் மற்றும் சர்ச்சைகள் தொகு

தேர்தலில் போட்டியிடக் கூடாது என வர்மாவைக் கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இவர் தேர்தலில் போட்டியிட்டால் இவரது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என இக்கடிதம் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.[5] இராசுமி வர்மா, தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, தனது சொந்த உயிருக்காக 25,00,000 ரூபாய் மீட்கும் தொகையைச் செலுத்தாவிட்டால் கொலை செய்துவிடுவதாகச் தொலைப்பேசி அழைப்பு மூலம் மிரட்டப்பட்டார். இருப்பினும், உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் மிரட்டல் நபர் கைது செய்யப்பட்டார்.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. https://vidhansabha.bih.nic.in/pdf/priority%20List.pdf [bare URL PDF]
  2. "BIHAR VIDHAN SABHA/Know your MLA". vidhansabha.bih.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
  3. "Rashmi Varma bjp Candidate 2020 विधानसभा चुनाव परिणाम Narkatiaganj". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
  4. Live, A. B. P. "Bihar Elections 2020 Candidate | Rashmi Varma | Narkatiaganj". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
  5. "हिंदी खबर, Latest News in Hindi, हिंदी समाचार, ताजा खबर". Patrika News (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "बिहार में नवनिर्वाचित BJP MLA रश्मि वर्मा से रंगदारी मांगने वाला युवक गिरफ्तार". Prabhat Khabar - Hindi News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
  7. "In Nitish's 'sushashan', BJP MLA asked to pay Rs 25 lakh as extortion sum". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-11-22. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசுமி_வர்மா&oldid=3677226" இலிருந்து மீள்விக்கப்பட்டது