இராசேந்திர பிரசாத் (நுரையீரல் மருத்துவர்)

இந்திய நுரையீரல் மருத்துவர்

இராசேந்திர பிரசாத் (Rajendra Prasad ) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான இலக்னோவைச் சேர்ந்த ஒரு மார்பு மருத்துவர் மற்றும் நுரையீரல் மருத்துவப் பேராசிரியர் ஆவார்[1][2]. இலக்னோ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த கிங் சியார்ச்சு மருத்துவக் கல்லூரியில் பிரசாத் 1974 ஆம் ஆண்டு மருத்துவத்தில் இளநிலை பட்டமும் 1979 ஆம் ஆண்டு முதுநிலை பட்டமும் பெற்றார். சில காலத்திற்கு பின் பிரசாத் தான் படித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திலேயே ஆசிரிய உறுப்பினராக பணியில் சேர்ந்து பின்னர் நுரையீரல் மருத்துவத் துறையின் தலைவரானார்[2]. உத்தரப்பிரதேச மாநில கிராம மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புது தில்லி பல்கலைக்கழகத்தின் வல்லபாய் படேல் மார்பு நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநராகவும் பணியாற்றினார். தற்போது இவர் மருத்துவ கல்வி இயக்குநராகவும், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகவும், ஈரா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் ஈரா இலக்னோ மருத்துவக் கல்லூரியின் நுரையீரல் மருத்துவப் பேராசியர் மற்றும் துறைத்தலைவராகவும் பணிபுரிகிறார்[3][4][5]. இலக்னோ நகரத்திலுள்ள அலிகஞ்சு பகுதியில் சொந்தமாக மருத்துவமனை தொடங்கி நடத்தி வருகிறார்.

இராசேந்திரப் பிரசாத்
Prof. (Dr.) Rajendra Prasad
தேசியம்இந்தியாn
பட்டம்பேராசிரியர், இயக்குநர்
விருதுகள்மரு. பி. சி. ராய் விருது
கல்விப் பின்னணி
கல்விகிங் சியார்ச்சு மருத்துவப் பல்கலைக்கழகம் , இலக்னோ பல்கலைக்கழகம்
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்ஈரா இலக்னோ மருத்துவப் பல்கலைக்கழகம், ஈரா பல்கலைக்கழகம்
வல்லபாய் படேல் மார்பு நிறுவனம், தில்லி பல்கலைக்கழகம்
உத்தரப்பிரதேச மாநில கிராம மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
கிங் சியார்ச்சு மருத்துவப் பல்கலைக்கழகம்
வலைத்தளம்
http://www.drrajendraprasad.com

இந்தியாவில் மருத்துவத் துறைக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை 2010 ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கழகம் இராசேந்திர பிரசாத்திற்கு வழங்கி சிறப்பித்தது[4][6].

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr Rajendra Prasad". www.drrajendraprasad.com. Archived from the original on 2019-09-01. பார்க்கப்பட்ட நாள் 2019-09-27.
  2. 2.0 2.1 "Repiratory Medicine". King George's Medical University. பார்க்கப்பட்ட நாள் 2019-09-27.
  3. "Pulmonary Department". Era University. பார்க்கப்பட்ட நாள் 2019-09-27.
  4. 4.0 4.1 "Professor Rajendra Prasad awarded with Dr. B.C. Roy National Award". IndianBureaucracy.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-27.
  5. "Professional Experience". www.drrajendraprasad.com. Archived from the original on 2019-03-20. பார்க்கப்பட்ட நாள் 2019-09-27.
  6. "Dr B C Roy National Awards presented to 25 eminent doctors – Medical News, Doctors' Views". India Medical Times (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-07-18. பார்க்கப்பட்ட நாள் 2019-09-27.


.