இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி (நூல்)

இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி (டப்ளின் தீர்ப்பு) என்னும் நூல் பூங்குழலி என்பவரால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் ஆகும்.

இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி (டப்ளின் தீர்ப்பு)
நூலாசிரியர்பூங்குழலி
அட்டைப்பட ஓவியர்தலித்முரசு
நாடுஇந்திய ஒன்றியம்
மொழிதமிழ்
பொருண்மைஅரசியல் தமிழீழம் போர் போர்க்குற்றம் ஐநா
வெளியீட்டாளர்புதுமலர் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
சூலை 2010
ஊடக வகைஅச்சு நூல்
பக்கங்கள்64
இலங்கைப் போர் குற்றம் பற்றி எழுதப்பட்ட சிறந்த ஆவணம்

நூல் அறிமுகம்

தொகு

இந்த நூல் ஈழப் போர் குறித்து டப்ளின் தீர்ப்பாயத்தீர்ப்பின் முழுவிவரம் ஆகும். இந்த நூலுக்கு கண குறிஞ்சி நூலறிமுகம் செய்துள்ளார். இந்த நூல் 2010, பிப்ரவரி இல் வெளியான தலித்முரசில் முழுவதுமாக வெளியிடப்பட்டதாக கண குறிஞ்சி குறிப்பிட்டு, இத்தீர்ப்பினை பட்டிதொட்டி எல்லாம் எடுத்துச்செல்ல வேண்டியது நமது கடமை எனக் கூறுகின்றார்.

நூல் பதிப்பு விவரங்கள்

தொகு

இந்த நூலில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஓர் அறிமுகம், குற்றச்சாட்டுகள், போர் நிறுத்தமும் அமைதிப் பேச்சு வார்த்தைகளின் முறிவும், போரின் இறுதி வாரங்களில் நடைபெற்ற அட்டூழியங்கள், ஆவணங்களின் திறனாய்வு, பரிந்துரைகள், இறுதிக்குறிப்புகள், நிகழ்ச்சி நிரல், அநீதியின் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், பன்னாட்டுச் சட்டங்களின்படி ஈழத்தமிழர்களின் உரிமைகள் என்னும் தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

தொகு
  1. பூங்குழலி, இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி, 2010, புதுமலர்:ஈரோடை