இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோவில்
இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோவில் (சிவபுரம் சிவன் கோவில்) தமிழ் நாடு திருவள்ளூர் மாவட்டம் சிவபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவத்தலம் ஆகும்.[1]
வரலாறு
தொகுஇக்கோவில் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் (10 ஆம் நூற்றாண்டு) எழுப்பப்பட்டது. பின்னர் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
மூர்த்தி
தொகுஇங்குள்ள பிரதான மூர்த்தி இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் என அழைக்கப்படுகிறார். தீர்த்தபாலீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் பெயர் காமாட்சி அம்மன் என்பதாகும்.
கல்வெட்டுகள்
தொகுஇக்கோவில் சுவர்கள் முழுவதிலும் மேலிருந்து கீழ் வரை நிறைய கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் காணப்படும் தகவல்களின் படி அவை இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் ஆகிய இருவர் காலத்திலும் பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. [2]
ஒரு கல்வெட்டில், இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி எழுதப்பட்டுள்ளது. அத்துடன், கோவிலில் இரண்டு நந்தா விளக்குகள் ஏற்றுவதற்காக அவன் 180 ஆடுகளைக் கோவிலுக்குக் கொடுத்தான் என்ற தகவலும் பொறிக்கப்பட்டுள்ளது.
10, 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளை ஆராய விரும்பும் மாணவர்களுக்கு இக்கோவில் நல்ல பயிற்சிக் களமாக உள்ளது.
பராமரிப்பு
தொகுதற்போது இக்கோவில் தமிழ் நாடு தொல்லியல் துறையினரால் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அமைவிடம்
தொகுதிருவள்ளூரிலிருந்து தக்கோலம் செல்லும் நெடுஞ்சாலையில் சிவபுரம் பேருந்து தரிப்பிலிருந்து 100 மீட்டர் உட்புறமாக கோவில் அமைந்துள்ளது.