சிவபுரம், திருவள்ளூர் மாவட்டம்

சிவபுரம் (அல்லது சிவபுரம் காலனி) தமிழ் நாடு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வட்டம், ஆலடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.. திருவள்ளூர் மாவட்டத் தலைநகரிலிருந்து 45 கிலோ மீட்டர் மேற்கே இச் சிற்றூர் அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து 34 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. .இதன் அஞ்சல் குறியீடு 601204 ஆகும். [1]

சிவபுரம் சிற்றூரானது பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கும். திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்

அமைவிடம்

தொகு

13.05 வ, 79.74 கி. பக்கத்திலுள்ள பெரிய நகரங்கள் அம்பத்தூர், பொன்னேரி, சென்னை, திருநின்றவூர் ஆகியவை.

வரலாற்றுத் தலம்

தொகு

சிவபுரம் சிற்றூரில் மாமன்னன் ராஜராஜ சோழனால் எழுப்பப்பட்ட ஒரு சிவாலயம் உள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் மூலவர் ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் என அழைக்கப்படுகிறார். அம்மன், காமாட்சி அம்மன் என அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு