இராஜா இராம் மோகன் இராய் விருது
இராஜா இராம் மோகன் இராய் விருது (Raja Ram Mohan Roy Award) என்பது இந்தியாவில் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்தியப் பத்திரிக்கையாளர் மன்றத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது ஆகும்.[1] இந்தியாவின் தேசிய பத்திரிக்கை தினமான நவம்பர் 16 அன்று புது தில்லியில் நடக்கும் வருடாந்திர நிகழ்வில் இந்த விருது வழங்கப்படுகிறது. இது 2012ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிக்கையாளர் மன்றத்தினால் பல்வேறு துறைகளில் "பத்திரிக்கைத் துறையில் சிறந்து விளங்குவதற்கான தேசிய விருது" ஆகும். மேலும் 2013ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. விருது கிராமப்புற பத்திரிகை, மேம்பாட்டு அறிக்கை, புகைப்பட பத்திரிகை, சிறந்த செய்தித்தாள், விளையாட்டு அறிக்கை, பாலின அடிப்படையில் பல பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.[1]
இராஜா இராம் மோகன் இராய் விருது | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | ஊடகவியல் சிறப்பு விருது |
தேதி | 2013 |
இடம் | புது தில்லி, இந்தியா |
வழங்குபவர் | இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் |
வெகுமதி(கள்) | 1 இலட்சம் உருபா |
முதலில் வழங்கப்பட்டது | 2013 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2020 |
அண்மைய விருது | ஏ. பி. கே. பிரசாத் |
இணையதளம் | presscouncil.nic.in |
முதல் இராஜா இராம் மோகன் இராய் விருதினைப் பெற்றவர் இந்தியா டுடேயின் சந்தோசு குமார் மற்றும் மலையாள மனோரமாவின் சி. கே. சிவானந்தன் ஆகியோருக்கு புலனாய்வு இதழியல் துறையில் சிறந்த பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்பட்டது.[2][3] இந்த விருதானது ஒரு பத்திரிகையாளர் பத்திரிகையில் பெறக்கூடிய இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படுகிறது. 2020ஆம் ஆண்டு வரை மொத்தம் 8 நபர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.[1]
2020-ஏ. பி. கே. பிரசாத்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "National Awards for Excellence in Journalism". www.presscouncil.nic.in. Press Council of India. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
- ↑ "NAEJ Awardees 2013". www.presscouncil.nic.in. Press Council of India. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
- ↑ "17 journalists bag Press Council Of India award". www.hindustantimes.com. Hindustan Times. 16 November 2013. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
- ↑ https://currentaffairs.adda247.com/raja-ram-mohan-roy-2023-presented-to-journalist-a-b-k-prasad/