இராஜா (திருவிழா)

ராஜா (Raja) அல்லது இராஜா பர்பா அல்லது மிதுன சங்கராந்தி என்பது இந்தியாவின் ஒடிசாவில் கொண்டாடப்படும் மூன்று நாள் பெண்மையின் பண்டிகை ஆகும். திருவிழாவின் இரண்டாவது நாள் சூரிய மாதத்தின் மிதுனத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அப்போது மழைக்காலம் தொடங்குகிறது. [1]

ராஜா தோலி கெலா, ஒடியத் திருவிழா

புராணம்தொகு

 
நாயாகரிலுள்ள ஜோயிலுள்ள சிலைகள், ஜெகந்நாதருக்கு கீழே பூதேவி மற்றும் ஸ்ரீதேவியின் சிலை உள்ளது

முதல் மூன்று நாட்களில் தாய் பூமி அல்லது விஷ்ணுவின் மனைவிகள் மாதவிடாய்க்கு ஆளாகிறார்கள் என்று நம்பப்படுகிறது. நான்காவது நாள் வசுமதி அல்லது பூமாதேவியின் குளியல் சடங்கு என்று அழைக்கப்படுகிறது. இராஜா என்ற சொல் சமசுகிருத வார்த்தையான 'ராஜாஸ்' என்பதிலிருந்து வந்தது, அதாவது மாதவிடாய் என்று பொருள். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும்போது, அவள் 'ராஜஸ்வாலா' அல்லது மாதவிடாய் பெண் என்று அழைக்கப்படுகிறாள். இடைக்காலத்தில் இந்த விழா இறைவன் ஜெகந்நாதரின் மனைவியான பூதேவியின் வழிபாட்டைக் குறிக்கும் விவசாய விடுமுறையாக மிகவும் பிரபலமாக இருந்தது.

இராஜா பர்பாதொகு

இது சூன் மாதத்தின் நடுப்பகுதியில் விழுகிறது, முதல் நாள் பஹிலி ராஜா என்றும், [2] இரண்டாவது நாள் மிதுன சங்கராந்தி என்றும், மூன்றாம் நாள் பூ தாஹா அல்லது பாசி ராஜா என்றும் அழைக்கப்படுகிறது . இறுதி நான்காவது நாள், வசுமதி குளியல் அழைக்கப்படுகிறது. இதில் பெண்கள் பூமியின் அடையாளமாக அரைக்கும் கல்ல்லில் மஞ்சளை தேய்த்து குளித்துவிட்டு மலர், குங்குமம் போன்றவற்றைக் கொண்டு வணங்குகிறார்கள். அனைத்து வகையான பருவகால பழங்களும் பூமி தாய்க்கு வழங்கப்படுகின்றன. முதல் நாளுக்கு முந்தைய நாள் சஜாபாஜா அல்லது ஆயத்த நாள் என்று அழைக்கப்படுகிறது. அப்போது வீடு முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. மசாலாப் பொருட்கள் மூன்று நாட்களுக்கு தரையில் வைக்கப்படுகின்றன. இந்த மூன்று நாட்களில் பெண்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு புதிய புடவை, ஆபரணங்களை அணிவார்கள். இது அம்புபாச்சி மேளா போன்றது . ஒடிசாவில் ஏராளமான பண்டிகைகளில் மிகவும் பிரபலமான இராஜா திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. உள்வரும் மழையால் அதன் தாகத்தைத் தணிக்க பூமி தன்னைத் தயார்படுத்திக் கொள்வது போலவே, குடும்பத்தின் திருமணமாகாத சிறுமிகளும் இந்த திருவிழாவின் மூலம் வரவிருக்கும் திருமணத்திற்காக தயார் செய்கிறார்கள். பண்டிகை காலத்தில் அவர்கள் இந்த மூன்று நாட்களை மகிழ்ச்சியாகக் கடந்து, சமைக்காத மற்றும் ஊட்டமளிக்கும் உணவை மட்டுமே சாப்பிடுவது, குளிக்காமல் இருப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். எதிர்காலத்தில் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுப்பதாக சபதம் செய்கிறார்கள்.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Raja Parba
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜா_(திருவிழா)&oldid=3234426" இருந்து மீள்விக்கப்பட்டது