இராஜி நாராயண்

இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர்

இராஜி நாராயண் (Rajee Narayan) இந்தியாவின் மும்பையில் வசிக்கும் நடனக் கலைஞரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். மேலும் மும்பையில் நிருத்யா கீதாஞ்சலி என்ற நடனப் பள்ளியை நிறுவி அதன் இயக்குனராக உள்ளார். இது பரதநாட்டியம், கர்நாடக இசை மற்றும் நட்டுவாங்கம் ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறது.[1]

இராஜி நாராயண்
பிறப்பு1931
சென்னை
இறப்பு25 செப்டெம்பர் 2020
குருகிராம்

ஆரம்ப காலம்

தொகு

ராஜி நாராயண் 1931 ஆகத்து 19ஆம் தேதி சென்னையில் எஸ்.நாராயண ஐயர் மற்றும் கங்கம்மாள் ஆகியோரின் 11வது குழந்தையாகப் பிறந்தார். ராஜி தனது 5வது வயதிலேயே பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். நடராஜா நாட்டிய நிகேதனின் நிறுவனரும் மற்றும் இயக்குனருமான இவரது சகோதரி நீலா பாலசுப்பிரமணியத்திடமும், மற்றும் சிறீ சரசுவதி கான நிலையத்தின் நிறுவனரும் மற்றும் இயக்குனருமான கே.லலிதா ஆகியோரிடமிருந்து நடனப்பயிற்சியினை மேற்கொண்டார். மேலும், துரையூர் ராஜகோபால சர்மா, வி. வி. சடகோபாலன், மற்றும் சுலோச்சனா மகாதேவன் ஆகியோரின் கீழ் கர்நாடக குரல் இசையையும் கற்றுக்கொண்டார்.[2]

தொழில்

தொகு

ராஜி நாராயண் தனது தொழில் வாழ்க்கையில் ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் சேர்ந்தார். பின்னர், கர்நாடக பாடகராக ஒரு பெயரைப் பெற்றார். அதே நேரத்தில், இவர் ஒரு பரதநாட்டிய ஆசிரியராக, திருமயிலை குறவஞ்சி, திருமால் அழகர், வள்ளிமலை குறவஞ்சி, ராதா கா சியாம், குத்ராத், பாரிஜாதம், மற்றும் கிருஷ்ண லீலா உள்ளிட்ட நடன நாடகங்களை நடனமாடினார். சக்தி மாயா, பால பக்தன், சாந்த் ஏக்நாத் போன்ற இந்தி மற்றும் தமிழ் படங்களிலும் இவர் பாடி நடித்துள்ளார்.[3]

நான்கு வயதில், ராஜி நாராயண் வணிக ரீதியாக 'நீராமின்சாகுரா' (சங்கரபாரணம் ராகம் - இக்கானா தாளம்) எனற பாடலை பதிவு செய்தார். குழந்தைகளுக்கான கதை சொல்லும் பாடல்கள் மற்றும் சில நாடகங்களின் பதிவுகளையும் இவர் வெளியிட்டுள்ளார். அந்த சிறு வயதிலேயே, இவர் தனது தந்தை தயாரித்த திரைப்படங்களில் தனது சொந்த பாடல்களுக்கு நடிக்க ஆரம்பித்தார்.  

கடப்பை லட்சுமியம்மாள் நடத்திய நடன-நாடகங்கள் மற்றும் கொல்லாட்டா ஜோத்ராய் போன்ற விழாக்களில் பங்கேற்றார். தனது இந்து மாதர் லட்சுமி விலாச சபா என்பதின் மூலம், பெண்களுக்காக சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.  

இயற்றிய பாடல்கள்

தொகு

ராஜி நாராயண் பரதநாட்டியத்திற்காக 200 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் சிலவற்றை தனது நிருத்ய கீதமாலா (2 தொகுதிகள்) என்றப் புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். சங்கீதா சரித்ர மாலா என்ற கர்நாடக இசையின் அடிப்படைகள் குறித்த புத்தகத்தையும் இவர் வெளியிட்டுள்ளார். மேலும் இவர், நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படைகளை விளக்கும் புத்தகமான நாட்டிய சாஸ்திர மாலாவின் ஆசிரியரும் ஆவார்.   உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடனம் குறித்த விழாக்கள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். முன்னணி நிறுவனங்களால் வழங்கப்பட்ட பல கௌரவங்களைப் பெற்ற ராஜி நாராயண் பாரதநாட்டியத்தில் தனது பங்களிப்புக்காக சங்கீத நாடக அகாதமி தாகூர் விருதைப் பெற்றுள்ளார்.[3]

ஆளுமை

தொகு

ராஜி நாராயண் ஒரு பரதநாட்டிய குரு, இசைக்கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் நடன இயக்குனர் ஆகியவற்றின் ஒரு அரிய கலவையாகும். இவர் பரதநாட்டியத்தை மட்டுமல்ல, கர்நாடக இசை, நாட்டியசாஸ்திரம் மற்றும் நட்டுவாங்கம் ஆகியவற்றையும் கற்பிப்பதில் தனித்துவமான வேறுபாட்டைக் கொண்டுள்ளார். இவர் 1965ஆம் ஆண்டில் மும்பையில் தனது நிறுவனமான நிருத்யா கீதாஞ்சலியை நிறுவினார்.[4] இவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மும்பை பல்கலைக்கழகத்தின் குழு உறுப்பினராகவும், நுண்கலை படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களுக்கான வெளிப்புற தேர்வாளராகவும் பணியாற்றினார். முனைவர் ஆராய்ச்சிக்கான ஆய்வறிக்கை ஆய்வாளராகவும் இருந்துள்ளார்.[5]

குறிப்புகள்

தொகு
  1. "A balancing act". இந்தியன் எக்சுபிரசு. 12 June 1997. பார்க்கப்பட்ட நாள் 8 August 2010.
  2. https://www.magzter.com/article/Art/Sruti/Rajee-Narayan[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  4. http://srutimag.blogspot.com/2017/08/rajee-narayan.html
  5. https://www.rajeenarayan.com/#/home

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜி_நாராயண்&oldid=3817249" இலிருந்து மீள்விக்கப்பட்டது