இராஜீவ் பரத்வாஜ்
இராஜீவ் பரத்வாஜ் (Rajeev Bhardwaj) என்பவர் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் 18வது மக்களவை உறுப்பினராக உள்ளார்.[1]
ராஜீவ் பரத்வாஜ் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | கிஷன் கபூர் |
தொகுதி | காங்ரா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
வேலை |
|
இளமை
தொகுராஜீவ் பரத்வாஜ் முதலில் காங்க்ரா மாவட்டத்தின் தேக்ராவில் உள்ள மங்க்வாலில் வசித்து வந்தார். இருப்பினும், 1970களில் பாங் அணை கட்டப்பட்டதைத் தொடர்ந்து இவரது குடும்பம் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. பல குடும்பங்கள் வாக்குறுதியாக்கப்பட்ட இழப்பீடு மற்றும் அதைத் தொடர்ந்து நில ஒதுக்கீட்டைப் பெறாததால் பரத்வாஜ் தொடர்ந்து தன்னை ஒரு பாங் அணை வெளியேற்றவாதி என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகுபரத்வாஜ் தற்போது காங்க்ரா தொகுதியிலிருந்து இந்திய மக்களவை உறுப்பினராக பணியாற்றுகிறார். 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தனது நெருங்கிய போட்டியாளரான ஆனந்த் சர்மாவினை 251,895 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Quint, The (2024-06-04). "Kangra Election Result 2024 Live Updates: BJP's Rajeev Bhardwaj Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "'Depot Bazar-wale doctor' Rajeev Bhardwaj, BJP's Kangra candidate, sees himself as a Pong Dam evictee". The Indian Express (in ஆங்கிலம்). 2024-05-28. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Kangra, Himachal Pradesh Lok Sabha Election Results 2024 Live: Kangra लोकसभा सीट पर Rajeev Bhardwaj को मिली बड़ी जीत, 251895 वोटोंं से Anand Sharma को किया पराजित". आज तक (in இந்தி). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.