இராஜேஸ்கண்ணன்

ஈழத்து எழுத்தாளர்

இராஜேஸ்கண்ணன் ஈழத்து எழுத்தாளர் மற்றும் கவிஞர்.

இராஜேஸ்கண்ணன்
தேசியம்இலங்கை
அறியப்படுவது,ஈழத்து எழுத்தாளர்
வலைத்தளம்
சங்கடப்படலை

வாழ்க்கை வரலாறு

தொகு

இராஜேஸ்கண்ணன் வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 'சாத்வீக பிரஸ்தம்' இமையாணன் கிழக்கு உடுப்பிட்டியை தற்போதைய முகவரியாகக் கொண்டவர். கவிதை, சிறுகதை, விமர்சனம், சமூகவியல், ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.

ஈழத்தில் வெளிவரும் மல்லிகை, ஞானம், ஜீவநதி, தினக்குரல், சுடர் ஒளி, இடி மற்றும் தமிழகச் சஞ்சிகையான தாமரை ஆகியவற்றில் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியற்றுறை விரிவுரையாளராக உள்ளார்

கல்வி

தொகு

பாடசாலைக் கல்வியை யா/கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியற்றுறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் கல்வியில் டிப்ளோமாவையும் பெற்றுக் கொண்டார்.

வெளிவந்த நூல்கள்

தொகு
  • முதுசொமாக - சிறுகதைத் தொகுதி 2002
  • போர்வைக்குள் வாழ்வு - கவிதைத் தொகுதி 2008
  • தொலையும் பொக்கிஷங்கள் - சிறுகதைத் தொகுதி 2009 வெளியீடு மீரா பதிப்பகம்

இலக்கியத்துறையில் பெற்ற பரிசுகள்

தொகு
  • அல்வையூர் கவிஞர் மு. செல்லையா ஞாபகார்த்த பரிசு-2008 சங்காரதரிசனம் சிறுகதைக்காக
  • செம்பியன் செல்வன் ஞாபகார்த்த பரிசு 2007 குதறப்படும் இரவுகள் சிறுகதைக்காக
  • அமரர் கலாபூஷணம் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த பரிசு-2008 துகிலுரிப்பு சிறுகதைக்காக

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேஸ்கண்ணன்&oldid=2716238" இலிருந்து மீள்விக்கப்பட்டது