சுடர் ஒளி இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 2000 ஆம் ஆண்டு முதல் வெளிவருகிறது. இதன் சகோதரப் பத்திரிகை உதயன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்றது. பல தடவைகள் இப்பத்திரிகை நிறுவனம் தாக்குதல்களுக்கு உள்ளானது. இப்பத்திரிகைப் பணியாளர்கள் பலர் துணை இராணுவக் குழுக்களினாலும், வேறு பல ஆயுதக் குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்டும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

சுடர் ஒளி
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)உதயன் பத்திரிகைக் குழுமம்
வெளியீட்டாளர்மாஸ் மீடியா சின்டிகேட் (பிரைவேட்) லிமிட்டெட்
ஆசிரியர்என். பத்மசீலன்
தலைமை ஆசிரியர்கே. கே. இரத்தினசிங்கம்
முகாமைத்துவ ஆசிரியர்கள்ஈ. சரவணபவன்
செய்தி ஆசிரியர்எஸ். அற்புதன்
நிறுவியதுசெப்டம்பர் 10, 2000 (2000-09-10)
அரசியல் சார்புநடுநிலை
மொழிதமிழ்
தலைமையகம்85 ஜெயந்தா மல்லிமராச்சி மாவத்தை, கொழும்பு, இலங்கை
சகோதர செய்தித்தாள்கள்உதயன் (யாழ்ப்பாணம்)
இணையத்தளம்sudaroli.com

வரலாறு தொகு

சுடர் ஒளி 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 இல் வாரப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 2001 அக்டோபர் 29 முதல் நாளிதழாக வெளிவரத் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டில் இதன் ஆசிரியராக ந. வித்தியாதரன் பொறுப்பேற்றார்.

2006 சூலையில் சுடர் ஒளி, மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் அரசு சார்பு துணை இராணுவக் குழுக்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அவற்றின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டது.[1] இவ்விரு மாவட்டங்களிலும் இப்பத்திரிகைகள் பின்னர் விற்பனையை ஆரம்பித்திருந்தாலும், அவற்றின் விற்பனை மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன.[2]

ஆசிரியர் ந. வித்தியாதரன் 2009 பெப்ரவரி 26 இல் கொழும்பு தெகிவளையில் மரண வீடு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது காவல்துறையினரால் ஆணை ஏதும் இல்லாமல் கைது செய்யப்பட்டுத் தாக்கப்பட்டார்.[3][4] பல மனித உரிமை அமைப்புகள் இவரது கைதுக்கு எதிராகக் குரல் எழுப்பின. விடுதலைப் புலிகள் 2009 இல் கொழும்பின் மீது நடத்திய வான் தாக்குதலில் இவருக்கும் பங்கிருந்ததாக அரசு குற்றம் சாட்டியது.[5][6] சாட்சியங்கள் எதுவும் இல்லாததால் இவர் 2009 ஏப்ரல் 24 அன்று விடுதலை செய்யப்பட்டார்.[7][8]

தாக்குதல்கள் தொகு

  • 2005 ஆகத்து 25 இல் கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது செய்தி சேகரிக்கச் சென்ற சுடரொளியின் படப்பிடிப்பாளர் யதுர்சன் பிரேமச்சந்திரன் தேசியவாத மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.[9][10] இவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியது.[9]
  • 2005 ஆகத்து 20 இல் வெள்ளவத்தையில் உள்ள சுடரொளி விளம்பர நிலையம் மீது இரண்டு கிரனேடுகள் எறியப்பட்டன. ஆனாலும் அவை இரண்டும் வெடிக்கவில்லை.[11][12][13]
  • கொழும்பு, பாலத்துறையில் அமைந்துள்ள சுடரொளி அலுவலகம் மீது 2005 ஆகத்து 29 இல் இரண்டு கிரனேடுகள் வெடிக்க வைக்கப்பட்டதில், பாதுகாப்பு ஊழியர் டேவிட் செல்வரத்தினம் என்பவர் கொல்லப்பட்டார், மேலும் மூவர் காயமடைந்தனர்.[11][14][15]
  • 2005 ஆகத்து 30 இல் சுடரொளியின் இரண்டு நாடாளுமன்ற செய்தியாளர்கள் பேருந்துத் தரிப்பிடம் ஒன்றில் வைத்துத் தாக்கப்பட்டனர்.[16][17]

மேற்கோள்கள் தொகு

  1. "Sri Lanka: Tamil newspapers curtail distribution after threats". Committee to Protect Journalists. 31 சூலை 2006.
  2. "Attacks on the Press 2006: Sri Lanka". Committee to Protect Journalists. 5 பெப்ரவரி 2007. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Prominent Tamil Editor abducted in Colombo, later claimed 'arrested'". தமிழ்நெட். 26 பெப்ரவரி 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28528. 
  4. "Sri Lanka: Editor Arrested and Beaten". மனித உரிமைகள் கண்காணிப்பகம். 1 மார்ச் 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. Mushtaq, Munza (6 டிசம்பர் 2009). "And… The White Vans Are Back!". த சண்டே லீடர் இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303231419/http://www.thesundayleader.lk/2009/12/06/and%E2%80%A6-the-white-vans-are-back/. 
  6. "Tamil editor arrested in Sri Lanka". Committee to Protect Journalists. 26 பெப்ரவரி 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. Jayawardene, Kishali Pinto (26 ஏப்ரல் 2009). "Calling for a change of policy in arrests and detentions". The Sunday Times. http://sundaytimes.lk/090426/Columns/focus.html. 
  8. "Vithiyatharan released". தமிழ்நெட். 24 April 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29149. 
  9. 9.0 9.1 "Press photographer beaten up amid continuing political tension". எல்லைகளற்ற செய்தியாளர்கள். 24 August 2005. Archived from the original on 4 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Tamil journalist in Colombo assaulted by JVP, arrested under ER". தமிழ்நெட். 23 August 2005. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15713. 
  11. 11.0 11.1 "Sudar Oli ATTACKED". Committee to Protect Journalists. 30 ஆகத்து 2005.
  12. "Advertising office of Colombo Tamil daily attacked". தமிழ்நெட். 20 ஆகத்து 2005. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15686. 
  13. "World Press Freedom Day bloodied by Uthayan attack". The Sunday Times. 7 மே 2006. http://sundaytimes.lk/060507/news/19.html. 
  14. "Watchman badly hurt in grenade attack on Tamil daily". எல்லைகளற்ற செய்தியாளர்கள். 30 ஆகத்து 2005. Archived from the original on 2013-12-04. பார்க்கப்பட்ட நாள் 2014-11-20.
  15. "Colombo Tamil daily bombed, one dead, three injured". தமிழ்நெட். 29 ஆகத்து 2005. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15749. 
  16. "CPJ condemns attacks on Tamil media". Committee to Protect Journalists. 6 செப்டம்பர் 2005. {{cite web}}: Check date values in: |date= (help)
  17. "Jaffna journalists hold demonstration against attack on Tamil media". தமிழ்நெட். 1 செப்டம்பர் 2005. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15761. 
  18. "Tamil journalist shot dead in Trincomalee". தமிழ்நெட். 24 சனவரி 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16989. 
  19. "Black January And Counter Moves By The Government". த சண்டே லீடர். 29 சனவரி 2012 இம் மூலத்தில் இருந்து 2020-02-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200214041921/http://www.thesundayleader.lk/2012/01/29/black-january-and-counter-moves-by-the-government/. 
  20. "Subramaniyam Sugitharajah". Committee to Protect Journalists.
  21. Perera, Jehan (30 சனவரி 2012). "No problem solving without first accepting problems do exist". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2018-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180930160623/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=44272. 
  22. "Tamil journalist gunned down in Trincomalee after covering paramilitary abuses". எல்லைகளற்ற செய்தியாளர்கள். 24 சனவரி 2006. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-11-20.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடர்_ஒளி&oldid=3554960" இலிருந்து மீள்விக்கப்பட்டது