இராட்டைசுற்றிபாளையம் காலபைரவர் கோயில்
காலபைரவர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் இராட்டைசுற்றிபாளையம் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பைரவர் கோயில் ஆகும்.[1]
இராட்டைசுற்றிபாளையம் காலபைரவர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | ஈரோடு மாவட்டம் |
அமைவு: | இராட்டைசுற்றிபாளையம் |
ஏற்றம்: | 260 m (853 அடி) |
ஆள்கூறுகள்: | 11°12′28″N 77°42′36″E / 11.207880°N 77.709875°E |
கோயில் தகவல்கள் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 260 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இராட்டைசுற்றிபாளையம் காலபைரவர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 11°12′28″N 77°42′36″E / 11.207880°N 77.709875°E ஆகும்.
சிவபெருமானின் 64 திருவுருவங்களை நினைவுபடுத்தும் வகையில் 64 வெவ்வேறு பைரவர் வடிவங்கள் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன.[2]
இக்கோயில் 'தென்னக காசி' என்றும் குறிப்பிடப்படுகிறது.[3]
ஆசியாவின் மிகப்பெரிய பைரவர் கோயில் என்று போற்றப்படும் இக்கோயிலின் நுழைவு வாயில் 39 அடி உயரமுள்ள பைரவர் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.[4] இது பஞ்சலோகத்தினால் ஆனது.[5] இந்த பைரவர் சிலையின் எடை சுமார் 650 கிலோகிராம் ஆகும்.[6]
இக்கோயிலின் கும்பாபிசேகம் 2023ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13ஆம் நாள் நடைபெற்றது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "உலகின் மிகப்பெரிய பைரவர் கோயில்... பக்தர்களுக்கு பேரருள்... இன்னும் 4 மாதங்கள் தான்!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ செல்வகுமார் (2022-12-05). "Bhairava temple: மிகப்பெரிய பைரவர்.. இவ்வளவு சிறப்பா? மகா கும்பாபிஷேக விழா எப்படியிருக்கும்?". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ Velmurugan s. "தென்னக காசியான ஈரோடு பைரவர் ஆலய கும்பாபிஷேகம்; பல மாநில பக்தர்கள் பங்கேற்பு". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ பொ.பாலாஜிகணேஷ் (2022-12-26). "ஆசியாவின் மிகப்பெரிய பைரவர் கோயில்!". Kalki Online. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ "உலகின் மிகப்பெரிய பைரவர் ஆலயத்திற்கு கும்பாபிஷேக விழா எப்போது தெரியுமா?". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ C.Elumalai (2022-12-04). "64 வடிவங்கள்.. 650 கிலோ எடை.. உலகின் மிக உயரமான பைரவர் சிலை அமைப்பு". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ தினத்தந்தி (2022-11-22). "அறச்சலூர் அருகே ராட்டை சுற்றிபாளையத்தில் 39 அடி உயர பைரவர் கோவில் கும்பாபிஷேகம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.