இராட்வெல் மகோடோ
இராட்வெல் மகோடோ (பிறப்பு 1987) (Rodwell Makoto) சிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 1987 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 2013 ஆம் ஆண்டு பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது..
இராட்வெல் மகோடோ | |
---|---|
நாடு | சிம்பாப்வே |
பிறப்பு | ஆகத்து 2, 1987 |
பட்டம் | பன்னாட்டு மாசுட்டர் (2013) |
உச்சத் தரவுகோள் | 2406 (செப்டம்பர் 2015) |
2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க திறந்தநிலை சதுரங்க பொட்டியினை மகோடோ வென்றார். மேலும் சிம்பாப்வே நாட்டிற்கான சதுரங்க ஒலிம்பியாடு அணியிலும் இவர் இடம்பெற்றார் [1] 2013 ஆம் ஆண்டில் பன்னாட்டு மாசுட்டர் பட்டம் பெற்ற இவர் 2015 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் 2403 என்ற எலோ தரப்புள்ளிகளை அடைந்தார். இராபர்ட் குவாசுக்குப் பிறகு சிம்பாப்வே நாட்டின் இரண்டாவது உயர் தரமதிப்பீடு பெற்ற பன்னாட்டு மாசுட்டர் என்ற சிறப்பு இவருக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் இவர் 2422 புள்ளிகள் பெற்றவராக இருந்தார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்கு இவர் தகுதி பெற்றார், அங்கு முதல் சுற்றில் விளாடிசுலாவ் கோவலெவ் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.[2]
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்ரில் வெற்றி பெற்ற இவர் 2023 ஆம் ஆண்டு சதுரங்க உலகக் கோப்பைக்கு மீண்டும் தகுதி பெற்றார்,[3] இங்கு அவர் முதல் சுற்றில் அசர்பைசான் நாட்டு சதுரங்க வீரர் நிசாத் அபாசோவால் தோற்கடிக்கப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "41st Chess Olympiad 2014 Open". Chess-Results Server. 2014-08-14. பார்க்கப்பட்ட நாள் 2022-09-01.
- ↑ "Tournament tree — FIDE World Cup 2021". worldcup-results.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
- ↑ "Makoto off to Azerbaijan for Chess World Cup". The Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ "FIDE World Cup 2023". chess24.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
புற இணைப்புகள்
தொகு- Rodwell Makoto rating card at FIDE
- Rodwell Makoto player profile and games at Chessgames.com
- Rodwell Makoto games at 365Chess