இராணி மேரி தொழில்நுட்ப நிறுவனம்
இராணி மேரி தொழில்நுட்ப நிறுவனம் (Queen Mary's Technical Institute) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் மும்பையில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. லேடி மேரி வில்லிங்டம் என்பவரால் முதலில் இராணி மேரி தொழில்நுட்ப பள்ளி என்ற பெயரில் ஊனமுற்ற வீரர்களுக்காக இது நிறுவப்பட்டது. பின்னர் 1923 ஆம் ஆண்டு புனே நகருக்கு மாற்றப்பட்டது.[1]
வகை | Military |
---|---|
உருவாக்கம் | 1917 |
அமைவிடம் | , , |
இணையதளம் | Official Website |
பின்னணி
தொகுமும்பை ஆளுநரின் மனைவியான லேடி மேரி வில்லிங்டன், முதல் உலகப் போரின்போது ஊனமுற்ற பம்பாயில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களுக்கு உதவுவதற்காக மே 1917 ஆம் ஆண்டு இப் பள்ளியை நிறுவினார். 1923 ஆம் ஆண்டு இப்பள்ளி [[புனே|புனேவுக்கு மாற்றப்பட்டது. இராணி மேரி மற்றும் லேடி மேரி வில்லிங்டன் ஆகியோரின் தனிப்பட்ட நன்கொடையாக அளிக்கப்பட்ட தலா 10 லட்சம் ரூபாய் (ஒரு மில்லியன் ரூபாய்) முதலீட்டில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. இராணி மேரி தொழில்நுட்பப் பள்ளி என்றிருந்த இப்பள்ளியின் பெயர் 1966 ஆம் ஆண்டு இராணி மேரி தொழில்நுட்ப நிறுவனம் என மாற்றப்பட்டது.[2] ஒரு தொண்டு கல்வி நிறுவனமாக நடத்தப்படும் இதன் அறங்காவலர்கள் முன்னாள் இந்திய ராணுவ வீரர்கள் ஆவர்.
இலக்குகள் மற்றும் நோக்கங்கள்
தொகுஇந்திய இராணுவம் மற்றும் பிற துணை ராணுவப் படைகளின் ஊனமுற்ற பணியாளர்களுக்கு இங்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஊனமுற்ற பணியாளர்களுக்கு தொழில்சார் பயிற்சியை அளித்து, அவர்கள் தன்னிறைவு பெற உதவுவதோடு அவர்களை மீண்டும் முக்கிய நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கவும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வாதாரத்தைப் பெறவும் இப்பயிற்சி உதவுகிறது.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "India Restores Her War Cripples to Self-Support". World Digital Library. 1919. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.
- ↑ "History of Queen Mary's Technical Institute". qmtiindia.org. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.
- ↑ "Queen Mary's Technical Institute celebrates 96th foundation day". The Times of India. 2013-05-13. http://m.timesofindia.com/articleshow/20126647.cms.
- ↑ Correspondence and Select Documents: Volume Seventeen. Presidency Period January 1954 to December 1955. பார்க்கப்பட்ட நாள் 30 May 2013.