இராணுவச் செவிலியர் சேவை

இந்திய இராணுவச் செவிலியர் சேவை (Military Nursing Services (MNS), இந்திய பாதுகாப்பு படைகளுக்கு மருத்துவம் பார்க்கும் ஆயுதப் படைகளின் மருத்துவர்கள் சேவையின் ஒரு அங்கமாகும். செவிலியர் சேவைப் பிரிவு, 1888ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா அரசால் நிறுவப்பட்டது.[1]

2024 குடியரசு நாளில் இந்திய இராணுவச் செவிலியர்களின் படையணி

இந்திய இராணுவச் செவிலியர்களுக்கு, இராணுவ அதிகாரிகளுக்கான தர ஊதியம் வழங்கப்படுகிறது. செவிலியர்கள் நிரந்தர கமிஷன் அல்லது குறுகிய கால சேவை கமிஷன் அதிகாரிகளாக நியமிக்கப்படுவர்.

இராணுவச் செவிலியர்களின் பதவிகள்

தொகு
 
இராணுவ செவிலியர் சேவை அதிகாரிகள்

பல்வேறு தர நிலைகளில் உள்ள இராணுவச் செவிலியர்கள் பதவி, தர வ்ரிசைகள்:[2]

அதிகாரிகள்
  • மேஜர் ஜெனரல்
  • பிரிகேடியர்
  • கர்ணல்
  • லெப். கர்ணல்
  • மேஜர்
  • கேப்டன்
  • லெப்டினண்ட்

புதிதாக இராணுவ செவிலியர் சேவையில் சேர்பவர்களுக்கு லெப்டினண்ட் பதவி வழங்கப்படுகிறது. இவர்கள் நாட்டின் பல்வேறு இராணுவ மருத்துமனைகளில் பணிபுரிய அமர்த்தப்படுவார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Military Nursing Service Celebrates Its 97th Raising Day". 2022-10-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
  2. "Florence Nightingales of the Indian army". 2021-08-27. பார்க்கப்பட்ட நாள் 2023-11-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணுவச்_செவிலியர்_சேவை&oldid=4094983" இலிருந்து மீள்விக்கப்பட்டது