இராதிகா மைரா தப்ரேசு

இராதிகா மைரா தப்ரேசு, இந்தியாவின் புதுதில்லியைச் சேர்ந்த இந்திய எழுத்தாளரும் ஆசிரியரும், கற்றல் மற்றும் மேம்பாட்டு நிபுணரும், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரும் டெட் மாநாட்டுப் பேச்சாளருமாவார். பன்முகத் திறமை கொண்டுள்ள இவர், 2016 ஆம் ஆண்டில் இவரது முதல் புதினத்தை வெளியுட்டுள்ளார்.

இராதிகா மைரா தப்ரேசு

இவரது முதல் புதினமான இன் தி லைட் ஆஃப் டார்க்னஸ் (In The Light Of Darkness) 2016 ஆம் ஆண்டில் மிகவும் விரும்பப்படும் மியூஸ் இந்தியா - சதீஷ் வர்மா இளம் எழுத்தாளர் விருது என்பதனை வென்றுள்ளது. [1] அவரது இரண்டாவது புதினமான தி எமன்சிபேஷன் ஆஃப் பர்சானா சித்திக் (The Emancipation of Farzana Siddiqui), 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டு பல்வேறு விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ராதிகாவின் கதைகள் மற்றும் கட்டுரைகள் இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளாக வெளிவந்துள்ளது; 2021 ஆம் ஆண்டில் "நம்பிக்கையின் மறுபக்கம்: அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் பயணங்கள்" என்ற அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரால் தொகுக்கப்பட்ட இங்கிலாந்தின் ஆர்ட்ஸ் கவுன்சில் மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் ஒரு இலக்கிய இதழிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற செவனிங் எழுத்தாளர் தொடருக்கான திட்ட வழிகாட்டிகளில் ஒருவராக செயல்பட்டுள்ளார்.

படிப்பு வாழ்க்கை தொகு

புனேவில் உள்ள சிம்பயோசிஸ் வணிக மேலாண்மை நிறுவனத்தில் (SIBM) முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்ற ராதிகா, அக்கல்லூரியின் 45 ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக தேர்ந்தேடுக்கப்பட்ட மாணவர் பேரவையின் முதல் மற்றும் இன்றுவரை (2024) ஒரே பெண்மணி ஆவார்[2].

கற்றல் மற்றும் மேம்பாட்டு துறையில் ITeS, டெலிகாம், பயணம் மற்றும் சுற்றுலா மற்றும் BFSI போன்ற சேவைத்துறைகளில் பல மூத்த நிர்வாக பதவிகளை வகித்துள்ள இவர் பாலின பாதுகாப்பு திட்டத்தில் தன்னார்வத் தொண்டு புரிந்துள்ளார். இந்தியாவில் உள்ள NTPC புறநகர்ப்பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பல வாழ்க்கைத் திறன்கள் மற்றும் மென் திறன்களுக்கான கற்றல் அமர்வுகளை நடத்திய குழந்தைகளுக்கான திறன் மற்றும் ஆளுமை மேம்பாட்டுத் திட்டமான ரூட்ஸ் & விங்ஸ் என்ற திட்டத்தின் நிறுவனரான இவர் கலாம் நூலகத் திட்டத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார், இதன்படி கிராமம் மற்றும் சிறு நகரத்திலுள்ள குழந்தைகளுக்கு ஒரு இலவச நூலகத்தை அணுகுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

எழுத்து வாழ்க்கை தொகு

தேசிய அளவிலான போட்டிகளில் பங்குகொண்டு ராதிகாவின் சில சிறுகதைகள் வெற்றிபெற்று பல்வேறு தொகுப்புகளில் வெளிவந்ததில் இருந்து தொடங்கியதே இவரின் எழுத்துப் பயணமாகும். ராதிகாவின் சில படைப்புகள் 'அன்பவுண்ட் - ஒரு மின்னிதழ்' என்பதில்

  • சங்கராக் (Sankarak),
  • டிஃபையன்ட் ட்ரீம்ஸ் (Defiant Dreams),
  • வென் தே ஸ்போக் (When They Spoke),
  • மோக் ஸ்டாக் அன்ட் குவாரல் (Mock Stock and Quarrel),
  • பேரன்டிங் இன் தி டைம்ஸ் ஆஃப் பேண்டமிக் (Parenting In The Times Of Pandemic) மற்றும்
  • தி அதர் சைட் ஆஃப் ஹோப் (the other side of hope) ஆகிய தலைப்புகளில் வெளிவந்துள்ளன.

2016 ஆம் ஆண்டில் நடந்த ஹைதராபாத் இலக்கிய விழா, 2017 ஆம் ஆண்டில் நடந்த டாக்கா இலக்கிய விழா, 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜார்ஜ்டவுன் இலக்கிய விழா மற்றும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனங்கேவின் பெண்கள் இலக்கிய விழா உட்பட பல இலக்கிய விழாக்களில் பேச்சாளராகவும், குழு உறுப்பினராகவும், நடுவராகவும் இருந்துள்ளார். சோபியா கல்லூரி (மும்பை), பெண்களுக்கான லேடி ஸ்ரீ ராம் கல்லூரி (டெல்லி), சிம்பயோசிஸ் வணிக மேலாண்மை நிறுவனம்(புனே), சிம்பயோசிஸ் வணிக மேலாண்மை நிறுவனம்(பெங்களூரு) மற்றும் சிம்பயோசிஸ் வணிக மேலாண்மை நிறுவனம் (ஹைதராபாத்) ஆகிய கல்லூரிகளிலும் பல்வேறு விரிவுரைகளை வழங்கியுள்ளார்.

 
இராதிகா மைரா தப்ரேசு

விருதுகள் மற்றும் அங்கீகாரம் தொகு

2018 ஆம் ஆண்டில், வங்காளதேசத்தில் நடைபெற்ற டெட் (மாநாட்டு) நிகழ்வில் பேசிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இராதிகா, இந்தியாவின் மிளிரும் நட்சத்திரங்கள் விருதினை 2017 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டில் இந்தியன் ஆவாஸ் தேர்ந்தெடுத்த மிகவும் ஊக்கமளிக்கும் 100 எழுத்தாளர்கள் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களில் இவரும் ஒருவரே.

தற்போதைய ஈடுபாடுகள் தொகு

பல்வேறு வணிக நிறுவனங்களின் நிர்வாகப்பதவிகளைத் துறந்து முழுநேர எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருந்துவரும் இராதிகா, கம்லூப்ஸில் உள்ள புகழ்பெற்ற மேற்கத்திய கனடா அரங்கில் தன்னார்வப் பணியாளராக பணியாற்றிவருகிறார். . அவர் இந்நிறுவனத்திலிருந்து வெளியாகும் கம்லூப்ஸின் மாற்று வானொலி நிலையத்தில், நியூ இன் தி லூப்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு வாராந்திர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கம்லூப்ஸில் குறிப்பாக கனடாவில் புலம்பெயர்ந்த அனுபவங்களில் கவனம் செலுத்தி, டூரிஸம் கம்லூப்சின் இணையதளத்திற்கான தொடர் வலைப்பதிவுக் கட்டுரைகளை எழுத, கனடாவில் குடியேறுபவர்களுக்கு விருப்பமான இடமாக கம்லூப்சை முன்னிலைப்படுத்த விளம்பரத்தூதுவராகவும் இராதிகா நியமிக்கப்பட்டுள்ளார். கம்லூப்சு நிகழ்த்துக்கலை திருவிழாவிலும் தன்னார்வத் தொண்டு செய்துவருகிறார்.

குடும்பம் தொகு

டாக்கா (வங்காளதேசம்), மற்றும் பினாங்கு (மலேசியா) ஆகிய இடங்களில் குறுகிய காலத்தில் வசித்து வந்த இராதிகாவும் அவரது குடும்பத்தினரும் தற்போது கனடாவின் பிரித்தானிய கொலம்பியாவில் சன்னி கம்லூப்சில் தங்களுக்கான புதிய வீட்டையும் புதிய வாழ்க்கையையும் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Muse India Young Writer Awards 2016 declared". 7 January 2017.
  2. "உத்வேகம் தரும் பெண்: ராதிகா தப்ரேஸ்". WeAreTheCity India (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-04-20. பார்க்கப்பட்ட நாள் 2024-02-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதிகா_மைரா_தப்ரேசு&oldid=3894425" இலிருந்து மீள்விக்கப்பட்டது