இராபெர்ட்டசு ஆங்கிலிக்கசு
வானியலாளர்
இராபெர்ட்டசு ஆங்கிலிக்கசு (Robertus Anglicus) அல்லது ஆங்கிலேயர் இராபெர்ட்டசு ஒரு 13 ஆம் நுற்றாண்டு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் மோன்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்திலும் பாரீசிலும் கல்வி கற்பித்தார். . [1] இவர் 1271 இல் De Sphera Mundi எனும் யோகான்னசு தெ சாக்ரோபோசுக்கோ எழுதிய நூலுக்கு உரை வரைந்தார். இந்நூல் கடிகாரம் செய்வதற்கான நுட்பக்கலை சார்ந்த அதுநாளது வரையிலான சிறந்த வளர்ச்சியை உள்ளடக்கிய நூலாகும்.[2]
இவர் "வான்கோள வரன்முறைகள்" எனும் கட்டுரையை எழுதினார். இதில் கோளங்கலின் அளவீடுகளைச் செய்யும் நெறிமுறைகள் அடங்கின.
மேற்கோள்கள்
தொகு- "Robert the Englishman (fl.1326)". Dictionary of National Biography 48. (1896). London: Smith, Elder & Co.