இராபெர்ட் உட்ரோ வில்சன்

இராபெர்ட் உட்ரோ வில்சன் (Robert Woodrow Wilson) (பிறப்பு ஜனவரி 10, 1936)ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1978இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெஞ்சியாசுடனும் பியோத்தர் இலியனிடோவிச் கபித்சாவுடனும் பெற்றார். இவர் ஆர்னோ ஆலன் பெஞ்சியாசுடன் 1964 இல் அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்தார். கபித்சாவின் பணிக்கும் மற்ற இருவரின் கண்டுஒஇடிப்புக்கௌம் தொடர்பேதும் இல்லை.

இராபெர்ட் உட்ரோ வில்சன் (இடதில்) ஆர்னோ ஆலன் பெஞ்சியாசு
பிறப்புசனவரி 10, 1936 (1936-01-10) (அகவை 87)
அவுசுட்டன், டெக்சாசு, ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்நியூசெர்சி
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைஇயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்இரைசு பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
அறியப்படுவதுஅண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு
விருதுகள்என்றி டிரேப்பர் பதக்கம் (1977)
இயற்பியலில் நோபல் பரிசு (1978)

நியூசெர்சியில் உள்ள ஓல்ம்டெல் நகரத்தின் பெல் ஆய்வகத்தில் ஓல்ம்டெல் கொம்பு உணர்சட்ட்த்தை ஆயும்போது தம்மால் விளக்கமுடியாத இரைச்சல் வாயிலைக் கண்டுபிடித்தனர்].[1] புறா எச்சம் உட்பட மற்ற வாய்ப்புள்ள இரைச்சல் வாயில்களை எல்லாம் அகற்றியதும், கடைசியாக இந்த இரைச்சல் அண்ட நுண்னலைக் கதிர்வீச்செனக் கண்டுபிடிக்கப்பட்டது. இது பெருவெடிப்புக் கோட்பாட்டை நிறுவும் சான்றாக விளங்கியது.

வாழ்வும் பணியும் தொகு

டெக்சாசில் அமைந்த அவுசுட்டனில் 1936 ஜனவரி 10 இல் வில்சன் பிறந்தார். அவுசுட்டன் சார்ந்த இரிவர் ஓக்சுவில் உள்ள இலாமார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.[2] அவுசுட்டனில் உள்ள இரைசு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு மேற்கொண்டார். இவர் இங்கே பை- பீட்டா- கப்பா கழகத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் முதுபட்டப் படிப்பைக் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றுள்ளார்.

விலசனும் பெஞ்சியாசும் 1977 இல் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கத்தைப் பெற்றனர்.[3]

வில்சன் பெல் ஆய்வகத்தில் 1944 வரை இருந்தார். இவர் 1944 இல் அப்போது மசாசூசட் கேம்பிரிட்ஜில் உள்ள ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தின் முதுநிலை உதவியாளராக அமர்த்தப்பட்டார். இன்றும் இவர் அம்மையத்தில் தான் பணிபுரிகிறார்.[4]

வில்சன் நியூசெர்சியில் உள்ள ஓல்ம்டெல் நகரில் வாழ்ந்துவந்தார்.[5]

வில்சன் எலிசபெத் உரோட்சு சாவின் அவர்களை மணந்தார்[6] in 1958.[7]

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு