இராமன் கபூர்

இராமன் கபூர் (Raman Kapur) என்பவர் ஓர் இந்திய மருத்துவ முறையில் குத்தூசி மருத்துவ நிபுணர், எழுத்தாளர் மற்றும் இந்தியக் குத்தூசி மருத்துவ சங்கத்தின் தலைவர் ஆவார்.[1]

இராமன் கபூர்
Raman Kapur
பிறப்புஅஜ்மீர், இராசத்தான், இந்தியா
பணிகுத்தூசி மருத்துவர்
அறியப்படுவதுகுத்தூசி மருத்துவம்
வாழ்க்கைத்
துணை
சுனிதா கபூர்
விருதுகள்பத்மசிறீ
மாற்று மருத்துவத்திற்கான தங்கப்பதக்கம்
இரத்தன் சிரோன்மணி விருது
வலைத்தளம்
www.kapuracu.com

மருத்துவ பணி தொகு

இராமன் கபூர் புது தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் குத்தூசி மருத்துவம் துறைக்குத் தலைமை தாங்குகிறார். சீன மருத்துவத்தின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து குத்தூசி மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்தும் நிறுவனமான குத்தூசி மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவ நிறுவனத்திற்குத் தலைவராகவும் உள்ளார்.[2] குத்தூசி மருத்துவம் பற்றிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகங்கள், குத்தூசி மருத்துவம் மற்றும் திசு சுத்திகரிப்பு முறைக்கான வழிகாட்டி, மருத்துவப் பயிற்சி மற்றும் குத்தூசி மருத்துவத்தில் மென்மையான லேசர்கள் - பொதுவான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் குத்தூசி மருத்துவத்தில் முதுகலை பட்டய படிப்புக்கு இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பாராகவும்உள்ளார்.

கல்வி தொகு

கபூர் புது தில்லியில் உள்ள சல்வான் பொதுப் பள்ளியில் கல்வி கற்றார். கபூர் 1979-ல் புது தில்லி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்நிலை மருத்துவப் பட்டம் பெற்றார்.[3] இவர் 1982-ல் புது தில்லியில் தனது சொந்த பயிற்சியைத் தொடங்கினார், பின்னர் சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஆலோசகராகச் சேர்ந்தார். இறுதியில் குத்தூசி மருத்துவம் துறையின் தலைவரானார்.[2] 1987-ல், மெடிசினா ஆல்டர்நேட்டிவா இவருக்குக் குத்தூசி மருத்துவத்துவத்தில் முதுநிலை மருத்துவப் பட்டம் வழங்கியது.

கவுரவமும் விருதுகளும் தொகு

மூன்று புத்தகங்கள் தவிர, கபூர் குத்தூசி மருத்துவம் சிகிச்சை பற்றிய பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் மெடிசினா ஆல்டர்நேட்டிவாவிடமிருந்து தங்கப் பதக்கம் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் இரத்தன் சிரோமணி விருதைப் பெற்றவர் மற்றும் சர்வதேச மாற்று மருந்து பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராக உள்ளார். மருத்துவத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக, இந்திய அரசு இவருக்கு 2008ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமக்கள் விருதை வழங்கியது.[4] இந்த விருதைப் பெறும் முதல் குத்தூசி மருத்துவ நிபுணர் என்ற பெருமையை இவர் பெற்றார். இவர் மருத்துவர், குத்தூசி மருத்துவ நிபுணர் மற்றும் இவரது புத்தகங்களின் இணை ஆசிரியரான சுனிதா கபூரை மணந்தார்.[5]

மேலும் பார்க்கவும் தொகு

  • கலர்பஞ்சர்

மேற்கோள்கள் தொகு

  1. "Governing body". Indian Society of Medical Acupuncture. 2016. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  2. 2.0 2.1 "Under pressure". 24 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  3. "Dr. Raman Kapoor vs State". India Kanoon. 31 August 2000. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  4. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. பார்க்கப்பட்ட நாள் 21 February 2020.
  5. The Authors. JayPee Brothers. 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788122202328. https://books.google.com/books?id=Nzwe2pTe5xMC&q=%22A+Guide+to+Acupuncture+and+Tissue+Cleansing+System%22&pg=PA2. பார்த்த நாள்: 25 January 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமன்_கபூர்&oldid=3789584" இலிருந்து மீள்விக்கப்பட்டது