இராமாயணமொழிசம்பு
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இராமாயணமொழிசம்பு (ഭാഷാരാമായണചമ്പു[1]) என்பது பூனம் நம்பூதிரியால் இயற்றப்பட்ட மொழிசம்பு வகையை சேர்ந்த கவிதை-வசனம் கலந்த ஒரு படைப்பாகும். மொழிசம்பு படைப்புகளில் இலக்கிய தரம், அளவு, ஆகியவற்றில் இது முதலிடம் பெறுகிறது. இராமாயண மொழிசம்பு இராவணனின் பிறப்பு, இராம அவதாரம், தாடகையின் அழிப்பு, போன்றவையில் துவங்கி சுவர்க்கத்தை அடைதல் வரை இருபது ஆய்வுக்கட்டுரைக்ளை கொண்டதாகும். கிட்டத்தட்ட இரண்டாயிரம் சுலோகங்கள், தண்டுகள், நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட உரைநடைகளையும் கொண்ட இந்த மாபெரும் கிரந்தத்தில் பூனத்தின் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல், இறைபக்தி, தடையற்ற கற்பனை, மற்றும் தகுந்த வார்த்தை பயன்பாடு, மனதின் விழிப்புணர்வு, ஆகியவற்றை காண இயலும்.
இலக்கிய நூலில் சம்புவின் பெருமை
தொகு"... இவை அனைத்தையும் விட அவரது மிகப்பெரிய சாதனை படைப்பு பாஷா ராமாயண சம்புவிலுள்ள இராவணன் பிறப்பு முதலான பாகங்களும், மற்றும் 13 சுவாதி திருநாள் சங்கீத கீர்த்தனைகளும் வெளியிடப்பட்டது தான். அதற்கு முன்புவரை இராமாயணசம்பு என்று ஒரு படைப்பு இருந்ததாக யாரும் அறிந்திருக்கவில்லை. இவற்றில் முதல் இரண்டு பகுதிகளுக்கு இராமாயண சம்பு என்றும் மற்ற பகுதிகளுக்கு உத்தர இராமாயண சம்பு என்றும் பெயரிடப்பட்டது." -- இவ்வாறு கேரள இலக்கிய வரலாறு என்ற இலக்கிய நூலில் உள்ளூர் எஸ் பரமேசுவர ஐயர்', அறுபத்தி நாலாவது அத்தியாயத்தில் கே. சிதம்பர வாத்தியார் என்பவரை பாராட்டி எழுதியுள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ பூனம் நம்பூதிரி. "பாஷா ராமாயணம் சம்பு" (in மலையாளம்). கேரள இலக்கிய கலைக்கூடம். பார்க்கப்பட்ட நாள் 2023-10-24.
{{cite web}}
: Check|archiveurl=
value (help)