இராம்பால் சாகர்

இந்திய இணை விளையாட்டு உயரம் தாண்டல் வீரர்

இராம்பால் சாகர் (Rampal Chahar) இந்தியாவைச் சேர்ந்த இணை ஒலிம்பிக் விளையாட்டு தடகள வீரராவார். 1989 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். [1] ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இணை விளையாட்டுப் போட்டிகளில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இப்போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ டி செனிரோ இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ இணை விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். இப்போட்டிகளில் முறையே 6 மற்றும் 5 ஆவது இடங்களைப் பிடித்தார். [2] [3]

இராம்பால் சாகர்
Rampal Chahar
தனிநபர் தகவல்
சுட்டுப் பெயர்(கள்)இராம் பால்
தேசியம்இந்தியர்
பிறப்பு10 சூலை 1989 (1989-07-10) (அகவை 34)
அரியானா, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஇணை தடகளம்
மாற்றுத்திறனாளர்உறுப்பு நீக்கம்
மாற்றுத்திறன் வகைப்பாடுஏ2
நிகழ்வு(கள்)உயரம் தாண்டல் , டி47 வகை

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இராம்பால் சாகர் இந்தியாவின் அரியானாவில் பிறந்தார். இவருக்கு 4 வயதாக இருந்தபோது, விவசாய வெட்டுக்கத்தியில் கை சிக்கி, வலது கை பகுதி துண்டிக்கப்பட்டது. தற்போது துனிசியாவில் நடைபெற்ற 2016 ஐபிசி போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். [4] [5]

தொழில் தொகு

இராம்பால் சாகர் டி47 ஊன வகை இணை உயரம் தாண்டுதல் போட்டியில் தேசிய சாதனை படைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு துனிசியாவில் நடந்த ஐபிசி தடகள போட்டியில் தங்கம் வென்றார். இதைத் தவிர 5 தேசிய அளவிலான தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். [6]

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரியோ இணை ஒலிம்பிக்கில் சாகர் தனது போட்டியில் 6ஆவது இடத்தைப் பிடித்தார். [7] 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இலண்டன் உலக இணை வெற்றியாளர் போட்டியில் இராம்பால் சாகர் தனது போட்டியில் 6ஆவது இடத்தைப் பிடித்தார். இந்தோனேசியாவின் இயாகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய இணை விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதல் டி-47 பிரிவில் இராம்பால் சாகர் வெள்ளிப் பதக்கம் வென்றார். [8]

மேற்கோள்கள் தொகு

  1. "Ram Pal - Athletics | Paralympic Athlete Profile". International Paralympic Committee (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
  2. "This Indian Paralympian Isn't Complaining About Rio - He Just Misses The Masala In His Dal". Indiatimes (in Indian English). 2016-09-09. பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
  3. Phatak, Saivee (2021-08-29). "India's Nishad Kumar wins Silver in High Jump after Exceptional Performance; Ram Pal Delivers Personal Best at 2020 Tokyo Paralympics » FirstSportz". FirstSportz (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
  4. "Meet The 19 Paralympians Who Are Going To Make India Proud In Rio And Will Need Your Wishes". IndiaTimes (in Indian English). 2016-09-03. பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
  5. "Tokyo Paralympics: खीर के शौकीन झज्‍जर के रामपाल देश को मेडल दिलाने के लिए लगाएंगे ऊंची छलांग". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
  6. "Meet The 19 Paralympians Who Are Going To Make India Proud In Rio And Will Need Your Wishes". IndiaTimes (in Indian English). 2016-09-03. பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
  7. Scroll Staff. "Paralympics: Rampal Chahar finishes sixth in men's high jump T-47 despite personal best". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
  8. Goswami, Stuty. "Know more about your Indian Paralympians". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்பால்_சாகர்&oldid=3897516" இலிருந்து மீள்விக்கப்பட்டது