இராம் தானி தாசு
இந்திய அரசியல்வாதி
இராம் தானி தாசு (Ram Dhani Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1925 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 ஆம் தேதியன்று சபல்பூரில் இவர் பிறந்தார். 1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். அதற்காக இவர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.[1]
பீகார் மாநிலத்தின் நவாதா மற்றும் கயா நாடாளுமன்ற தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 1952 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை முதல் நான்கு மக்களவைகளில் உறுப்பினராக இருந்தார்.
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் சமூகத்தின் பிற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்திற்காக இராம் தானி தாசு அயராது உழைத்தார். 1950 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] தனது 75ஆவது வயதில் 2000 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பாட்னாவில் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "4th Lok Sabha Members Bioprofile - DAS, SHRI RAM DHANI". பார்க்கப்பட்ட நாள் 12 December 2017.
- ↑ Lok Sabha Debates (PDF). New Delhi: Lok Sabha Secretariat. 13 Dec 2000. p. 1.
- ↑ Death notice for Ram Dhani Das