இராம் பரிக்சன் ராய்

இராம் பரிக்சன் ராய் (Ram Parikshan Roy) (1920–1997) இந்தியத் தாவரவியல் பேராசிரியர் ஆவார். மரபணுத் தொகையியல், உயிரணு மரபியல், தாவர இனப்பெருக்கம், திசு வளர்ப்பு மற்றும் உயிரணு வகைப்பாட்டியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவர் ஆவார்.[1]

1951 ஆம் ஆண்டில் ராய்

தொடக்க வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

இராய் 1920 ஆம் ஆண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கங்காபூரில் பிறந்தார். 1947 ஆம் ஆண்டில் பாட்னா அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.[2]::185 1953-ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

தொகு

இராய் தனது 37 வயதில் பாட்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் தாவரவியல் தலைவராகவும் ஆனார்.[3] பின்னர் இவர் பாட்னாவில் உள்ள உயிரணு மரபியல் பிரிவில் சிறப்பு உதவி பல்கலைக்கழக மானியக்குழு மையத்தின் அறிவியல் பிரிவின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் பணியாற்றினார். 1982 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தில் தகைசால் விஞ்ஞானி:188 ஆனார்.[3]

ஆய்வு மற்றும் வெளியீடுகள்

தொகு

இராய் பாட்னாவில் உள்ள உள்ளூர் விலங்கினங்களைப் பற்றி ஒரு கணக்கெடுப்பை நடத்தினார், மேலும் 1948 ஆம் ஆண்டில் பாட்னாவின் மரங்கள் என்ற தலைப்பில் ஒரு தனி வரைவு நூலை வெளியிட்டார். பாட்னா பல்கலைக்கழகத்தில் ஐம்பதுகளில் தாவரங்களின் உயிரணு மரபியல் குறித்த செயலில் உள்ள பள்ளியை நிறுவினார். மேலும் 1960 களின் முற்பகுதியில் இந்திய வெள்ளரிகளின் உயிரணு மரபியல் குறித்த முக்கியமான மற்றும் இலட்சியத் திட்டத்தை தொடங்கினார்.:187

பரிசுகள் மற்றும் அங்கீகாரங்கள்

தொகு

இராய் 1973 இல் பீர்பால் சஹானி தங்கப் பதக்கத்தையும் 1975 -ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு புத்தாய்வு மாணவர் நிலையையும் வென்றார்.[4] இந்தியாவின் தேசிய அறிவியல் அகாதெமி, இந்திய தாவரவியல் சங்கம், இந்திய மரபியல் சங்கம் மற்றும் தாவர இனப்பெருக்க சங்கம் (லண்டன்) ஆகியவற்றின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராக ஆனார். ராய் உயிரணுவியலாளர்கள் மற்றும் மரபியல் நிபுணர்களின் சங்கத்தின் நிறுவநர் செயலாளராக இருந்தார்.:185

மேற்கோள்கள்

தொகு
  1. "Deceased Fellow". Indian National Science Academy. பார்க்கப்பட்ட நாள் 15 September 2020.
  2. "Biographical Memoirs of Fellows of the Indian National Science Academy". Indian National Science Academy. 2000. பார்க்கப்பட்ட நாள் 15 September 2020.
  3. 3.0 3.1 R P Sinha; Upendra Kishore Sinha (1989). "Vistas in Cytogenetics". Spectrum Publishing House. பார்க்கப்பட்ட நாள் 15 September 2020.
  4. "Award Achievers". The Indian Botanical Society. பார்க்கப்பட்ட நாள் 15 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_பரிக்சன்_ராய்&oldid=4145861" இலிருந்து மீள்விக்கப்பட்டது