தாவர வளர்ப்பு
தாவர வளர்ப்பு (Plant breeding) தேவையான பான்மைகளைப் பெற தாவரங்களின் பண்புநலங்களை மாற்றுவதற்கன அறிவியலாகும்.[1] It has been used to improve the quality of nutrition in products for humans and animals.[2] தாவர வளர்ப்பை பல்வேறு நுட்பங்களால் அடையலாம். இதற்கு வேண்டப்படும் பான்மைகள் உள்ள தாவரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வளர்த்தல் மிக எளிய முறையாகும். மிகச் சிக்கலான மூலக்கூற்று நுபங்களைப் பயன்படுத்தல் அண்மைய முறையாகும். பின்னத்ற்கு தாவரங்களி மரபியல், குறுமவகங்களைப் பற்ரிய அறிவு தேவையாகிறது (காண்க [கஆக்கவகைப் பயிர்]], பயிரிடும்வகை). தாவர மரபன்கள் தாவரத்தின் பண்பியலா, அளவியலான பண்புநலங்களைத் தீர்மானிக்கின்றன. தாவர வளர்ப்பாளர்கள் வளர்ப்புத் தாவரங்களில் குறிப்பிட்ட தேவைப்படும் பண்புநலங்களை உருவாக்கவும் புதிய பயிரிடும்வகைத் தாவரங்களை உருவாக்கவும் முனைகின்றனர்.[2]
தாவர வளர்ப்பு மாந்த நாகரிகத்தின் தோற்றதில் இருந்தே பல்லாயிரம் ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்துவருகிறது. இது தோட்டக்க்லைஞர், உழவர்களின் வழியாகவும் தொழில்முறை தாவர் வளர்ப்பாளர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதற்குத் தொழில்முறை வல்லுனர்கள் அரசு நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் குறிப்பீட்ட பயிர்சார் தொழில்துறைக் கழகங்களையும் ஆராய்ச்சி மையங்களையும் பயன்படுத்தினர்.
பன்னாட்டு வளர்ச்சி முகவாண்மைகள் உணவுக் காப்புறுதிக்குப் புதிய பயிர்களை உருவாக்கி வளர்த்தல் முதன்மையானதென நம்புகின்றன. இதற்கு உயர்விளைச்சலும், நோயெதிர் பண்பும், வறட்சிதாங்குதிறமும் பல்வேறு வட்டாரச் சுற்றுச்சூழல்களில் வளரும் தகவும் உள்ள புதிய பயிரிடும்வகைகளை உருவாக்க வேண்டும்.
ராகுல் செ
வரலாறு
தொகுதாவர வளர்ப்பு 9000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்தகு வேளாண்மையுடன் தோன்றியது. குறிப்பாக, முதல் வேளாண்மைப் பயிர்களின் வீட்டினமக்கத்தோடு தோன்றிவிட்டது.[3]தொடக்கத்தில் மிக முந்திய கால உழவர்கள் குறிப்பிட்ட சில தேவையான பான்மைகள் உள்ள உணவுத் தாவரங்களைத்தெரிவுசெய்து, இவற்றை அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் முன்னோடிப் பயிர்களாகப் பயன்படுத்தினர். இது நாளடைவில் தோற்றவகை பண்புநலங்களைத் திரளச் செய்தது.
கிமு 2000 க்கு முன்பே சீனாவில் தாவர ஒட்டுநுட்பம் நடைமுறையில் இருந்துள்ளது.[4]
கிமு 500 ஆம் ஆண்டளவில் இது நன்கு நிறுவப்பட்ட நடைமுறை ஆனது [5]
கிரகொரி மெண்டெல்l (1822–84) "மரபியலின் தந்தை" எனக் கருதப்படுகிறார். இவரது தாவக் கலப்பின செய்முறைகள் மெண்டெலிய மரபுப்பேற்றுக் கோட்பாட்டை நிறுவியது. தாவர வளர்ப்பு ஊடாக, பயிர் விலைச்சலை மேம்படுத்த மரபியல் புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்தது.
அண்மைக்கால தாவர வளர்ப்பு மரபியலைப் பயன்படுத்தினாலும் அதன் அறிவியல் தளம் மேலும் அகல்விரிவானது. இது மூலக்கூற்று உயிரியல், உயிர்க்கல உயிரியல், அமைப்பியல் முறைகள், உடலியங்கியல், நோயியல், பூச்சியியல், வேதியியல், புள்ளியியல், உயிரளவையியல் ஆகிய பல புலங்களின் அறிவைப் பயன்படுத்துவதோடு தனக்கே உரிய தொழில்நுட்பத்தையும் (தாவர உயிரித் தொழில்நுட்பம்) உருவாக்கிக் கொண்டது.
செவ்வியல் தாவர வளர்ப்பு
தொகுதாவர வளர்ப்பின் ஒரு நுட்பம் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் ஆகும். இம்முறை வேண்டாத பண்புகளை நீக்கிவிட்டு, வேண்டப்படும் பண்புகளைத் தேர்ந்தெடுத்து அதன்படித் தாவரங்களை வளர்த்தலாகும்.[6]
மற்றொரு நுட்பம் மிக நெருங்கிய அல்லது விலகிய தனியன்களை கலந்து வேண்டிய பண்புகள் அமைந்த புதிய பயிர்களை விளையச் செய்வதாகும். இது கலப்பினத் தாவர வளர்ப்பு எனப்படுகிறது. இந்தக் கலப்பினப் பெருக்கத்தில் ஒருவகையில் இருந்து வேண்டிய பண்புகளைப்/மரபன்களை புதிய மரபியல் பின்னணியில் அறிமுகப்படுத்துகிறது. எடுத்துகாட்டாக, பனிதாங்கும் பட்டாணியை உயர்விளைச்சல் பட்டாணியுடன் கலந்து உயர்விளைச்சல் திறமையைக் குறைக்காமல் பனிதாங்குமியல்பை அறிமுகப் படுத்தலாம். இப்படி உருவாகிய வழித்தொன்றலை மறுபடியும் உயர்விளைச்சல் பெற்றோருடன் மீன்டும் கலந்திடச் செய்து அடுத்த தலைமுறை உயர்விளைச்சல் பெற்றோரைப் போலவே அமைதலை உறுதிப் படுத்தலாம். இது மறுகலப்பு வளர்ப்பு எனப்படுகிறது.
வளர்ப்பாளர்கள் பயிர்த் தாவரங்களில் பின்வரும் பண்புநலங்களை உள்ளடக்க முயன்றனர்:
- கூடுதலான ஊட்டம், மேம்பட்ட நறுமணம், அல்லது பேரழகு ஆகிய தர மேம்பாடு
- கூடுதலான பயிர்விளைச்சல்
- உவர்மை, அதீத வெப்பநிலை, வறட்சி பொஒன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்குக் கூடுதல் பொறுதி
- பூஞ்சைகள், குச்சுயிரிகள், நச்சுயிரிகள் ஆகியற்ரை எதிர்க்குந் திறன்கள்
- பூச்சிவகைத் தீங்குயிரிகளுக்கான கூடுதல் பொறுதி
- களைக்கொல்லிகளுக்கான கூடுதல் பொறுதி
- அறுவடைக்குப் பின்னான நெடுங்காலத் தேக்கத் திறமை
இரண்டாம் உலகப்போருக்கு முன்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Breeding Field Crops. 1995. Sleper and Poehlman. Page 3
- ↑ 2.0 2.1 Hartung, Frank; Schiemann, Joachim (2014). "Precise plant breeding using new genome editing techniques: opportunities, safety and regulation in the EU". The Plant Journal 78 (5): 742–752. doi:10.1111/tpj.12413. பப்மெட்:24330272.
- ↑ Piperno, D. R.; Ranere, A. J.; Holst, I.; Iriarte, J.; Dickau, R. (2009). "Starch grain and phytolith evidence for early ninth millennium B.P. maize from the Central Balsas River Valley, Mexico". PNAS 106 (13): 5019–5024. doi:10.1073/pnas.0812525106. பப்மெட்:19307570.
- ↑ (2012) "Simulation-based Economic Feasibility Analysis of Grafting Technology for Propagation Operation". {{{booktitle}}}, Institute of Industrial Engineers.
- ↑ Mudge, K.; Janick, J.; Scofield, S.; Goldschmidt, E. (2009). A History of Grafting. Vol. 35. pp. 449–475. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470593776.ch9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470593776. Archived from the original (PDF) on 2017-09-15. பார்க்கப்பட்ட நாள் 2019-12-17.
{{cite book}}
:|journal=
ignored (help) - ↑ Deppe, Carol (2000). Breed Your Own Vegetable Varieties. Chelsea Green Publishing. |page=237-244
பொதுப் பார்வைகள்
தொகு- Susan McCouch (2004). "Diversifying Selection in Plant Breeding". PLoS Biol 2 (10): e347. doi:10.1371/journal.pbio.0020347. பப்மெட்:15486582.
- Briggs, F.N. and Knowles, P.F. 1967. Introduction to Plant Breeding. Reinhold Publishing Corporation, New York.
- Curry, Helen Anne. Evolution Made to Order: Plant Breeding and Technological Innovation in Twentieth-Century America (U of Chicago Press, 2016). x, 285 pp.
- Gepts, P. (2002). "A Comparison between Crop Domestication, Classical Plant Breeding, and Genetic Engineering". Crop Science 42 (6): 1780–1790. doi:10.2135/cropsci2002.1780. https://www.crops.org/publications/cs/abstracts/42/6/1780.
- The Origins of Agriculture and Crop Domestication – The Harlan Symposium பரணிடப்பட்டது 2004-11-30 at the வந்தவழி இயந்திரம்
- Schlegel, Rolf (2009) Encyclopedic Dictionary of Plant Breeding பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம் 2nd ed. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439802427), CRC Press, Boca Raton, FL, USA, pp 584
- Schlegel, Rolf (2007) Concise Encyclopedia of Crop Improvement: Institutions, Persons, Theories, Methods, and Histories (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781560221463), CRC Press, Boca Raton, FL, USA, pp 423
- Schlegel, Rolf (2014) Dictionary of Plant Breeding, 2nd ed., (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1439802427), CRC Press, Boca Raton, Taylor & Francis Group, Inc., New York, USA, pp 584
- Schouten, Henk J.; Krens, Frans A.; Jacobsen, Evert (2006). "Do cisgenic plants warrant less stringent oversight?". Nature Biotechnology 24 (7): 753. doi:10.1038/nbt0706-753. பப்மெட்:16841052. https://archive.org/details/sim_nature-biotechnology_2006-07_24_7/page/753.
- Schouten, Henk J.; Krens, Frans A.; Jacobsen, Evert (2006). "Cisgenic plants are similar to traditionally bred plants". EMBO Reports 7 (8): 750–753. doi:10.1038/sj.embor.7400769. பப்மெட்:16880817.
- Sun. "From indica and japonica splitting in common wild rice DNA to the origin and evolution of Asian cultivated rice". Agricultural Archaeology 1998: 21–29. https://carleton.ca/~bgordon/Rice/papers/SUN98.htm. பார்த்த நாள்: 2019-12-17.
- Thro, A.M.; Spillane, C. (1999) Biotechnology assisted participatory plant breeding: Complement or contradiction? CGIAR Program on Participatory Research and Gender Analysis, Working Document No.4, CIAT: Cali. 150pp.
- Deppe, Carol (2000). Breed Your Own Vegetable Varieties. Chelsea Green Publishing.
- Vaschetto, Luis M., தொகுப்பாசிரியர் (2020). "Cereal Genomics" (in en-gb). Methods in Molecular Biology. doi:10.1007/978-1-4939-9865-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1064-3745. https://doi.org/10.1007/978-1-4939-9865-4.
வெளி இணைப்புகள்
தொகு- Plant Breeding and Genomics eXtension Community of Practice பரணிடப்பட்டது 2015-09-18 at the வந்தவழி இயந்திரம் – education and training materials for plant breeders and allied professionals
- Plant Breeding Updates
- Hybridization of Crop Plants பரணிடப்பட்டது 2009-02-23 at the வந்தவழி இயந்திரம் – large practical reference on plant hybridization
- Infography about the History of Plant Breeding
- Glossary of plant breeding terminology by the Open Plant Breeding Foundation பரணிடப்பட்டது 2010-06-06 at the வந்தவழி இயந்திரம்
- National Association of Plant Breeders (NAPB)
- The Global Partnership Initiative for Plant Breeding Capacity Building – GIPB
- FAO/IAEA Programme Mutant Variety Database
- FDA Statement of Policy – Foods Derived from New Plant Varieties