இராம. இராமநாதன்

இந்திய அரசியல்வாதி

இராம. இராமநாதன் (Rama. Ramanathan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். முதுகலை பட்டதாரியான இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதோடு அதிமுக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும் ஆவார். ஜெ. ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனால் மட்டுமே நான் திருமணம் செய்து கொள்வேன் என்று பொதுவெளியில் அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[1] 1991 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] 1996, 2001, 2006, 2011 தேர்தல்களில் கும்பகோணம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கும்பகோணம் நகரச் செயலாளராக உள்ளார்.[3]

இராம. இராமநாதன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1991 கும்பகோணம் அஇஅதிமுக

மேற்கோள்கள் தொகு

  1. Renganathan, L. (2016-04-26). "Rama. Ramanathan will have to mothball marriage plans again". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.
  3. "அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சிகள்". தினமணி. https://www.dinamani.com/election/article.php?id=3761383. பார்த்த நாள்: 14 January 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம._இராமநாதன்&oldid=3926532" இலிருந்து மீள்விக்கப்பட்டது