இராய் கூட்டறிகுறி
இராய் கூட்டறிகுறி (Reye's syndrome) என்பது அழற்சியற்ற மூளைக்கோளாறு மற்றும் கல்லீரல் கோளாறு ஆகியன உருவாகக்கூடிய ஒரு நோய்க் கூட்டறிகுறியாகும்.[1] இது பெரும்பாலும் தீநுண்ம நோயில் இருந்து குணமடையும் பருவத்தில் ஏற்படுகின்றது. சிறார்களில் இன்ஃபுளுவென்சா அல்லது சின்னம்மை போன்ற தீநுண்ம நோய்களின் போது அசுப்பிரின் அல்லது சலிசிலேட்டுகள் பயன்படுத்துதல் இந்நோயுடன் தொடர்புடையதாக உள்ளது.[1] இராய் கூட்டறிகுறி 1963இல் இடக்ளசு இராய் என்பவரால் முதலில் விவரிக்கப்பட்டது.[2]
இராய் கூட்டறிகுறி | |
---|---|
Reye's syndrome | |
இராய் கூட்டறிகுறியால் இறந்த சிறுபிள்ளையின் கல்லீரலின் இழையவியல் நுண்ணோக்கிப் படம் | |
உச்சரிப்பு | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | சிறுவர் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | G93.7 |
ஐ.சி.டி.-9 | 331.81 |
நோய்களின் தரவுத்தளம் | 11463 |
மெரிசின்பிளசு | 001565 |
ஈமெடிசின் | emerg/399 |
பேசியண்ட் ஐ.இ | இராய் கூட்டறிகுறி |
ம.பா.த | D012202 |
ஆர்பனெட் | 3096 |
நோய் அறிகுறிகள்
தொகுகுழந்தைகளில் வயிற்றோட்டம், விரைவாக மூச்சுவிடல் மற்றும் இருவயதிற்கும் மேற்பட்ட சிறார்களில் வாந்தி, தூக்கமயக்கம் என்பன முதன்மை அறிகுறிகளாகும். இத்துடன் எரிச்சல் தன்மை, குழப்பம், வலிப்பு, சோம்பல், மந்த நிலை போன்றனவும் ஏற்படும். வலிப்பு அல்லது மயக்க நிலை ஏற்படின் அவசர மருத்துவ உதவி நாடல் அவசியம்.
உசாத்துணைகள்
தொகு- ↑ 1.0 1.1 Pugliese, A; Beltramo, T; Torre, D (October 2008). "Reye's and Reye's-like syndromes.". Cell biochemistry and function 26 (7): 741–6. doi:10.1002/cbf.1465. பப்மெட்:18711704.
- ↑ McMillan, Julia A.; Feigin, Ralph D.; DeAngelis, Catherine; Jones, M. Douglas (2006). Oski's Pediatrics: Principles & Practice (in ஆங்கிலம்). Philadelphia: Lippincott Williams & Wilkins. p. 2306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781738941.