இரா. அருள்

இந்திய அரசியல்வாதி

இரா. அருள் (R. Arul) என்பவர் தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் தனது அரசியல் வாழ்க்கையை பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினராகத் தொடங்கி, அக்கட்சியில் பல்வேறு பதவிகள் வகித்தார். இவர் தற்போது பா.ம.கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.[1] அருள் சேலம் மாவட்டம் கோட்டத்தில் உள்ள இராஜராஜன் நகரில் வசித்து வருகின்றார். சேலத்தில் உள்ள விநாயக மிசன் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இவர் இளம் அறிவியல் வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் தனது தொகுதி வாக்காளர்களுடன் தொடர்புகொள்வதற்காக இணையதளத்தைத் தொடங்கியுள்ளார்.[3]

இரா. அருள்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
முன்னையவர்கோ. வெங்கடாசலம்
தொகுதிசேலம் மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 ஆகத்து 1971 (1971-08-13) (அகவை 53)
அரசியல் கட்சிபாட்டாளி மக்கள் கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. https://en.youturn.in/factcheck/pmk-mango-token-news7-dmk-salem.html
  2. "Salem West election results 2021".
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._அருள்&oldid=3544024" இலிருந்து மீள்விக்கப்பட்டது