இரா. சீனிவாசன்

தோழர் இரா சீனிவாசன் (R Srinivasan, இறப்பு: மே 5, 2012, அகவை 61) மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொருளாளராக பணியாற்றினார்.

இரா சீனிவாசன்
இரா சீனிவாசன்
பிறப்பு(1951-06-02)சூன் 2, 1951
இறப்பு(2012-05-05)மே 5, 2012
பணிஇடது சாரி அரசியல்
செயற்பாட்டுக்
காலம்
1977 – 2012

அரசியல் வாழ்க்கை

தொகு

70களின் பிற்பகுதியிலிருந்தே அவர் நக்சல்பாரி புரட்சிகர அரசியலின் ஆதரவாளராக இருந்து, பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சி நடவடிக்கைகளிலும், புரட்சிகர அரசியலின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் 1991ம் ஆண்டு விடுபட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மகஇக மாநிலப் பொருளாளராகப் பணியாற்றியது மட்டுமின்றி, பல்வேறு போராட்டங்களிலும் முன்னணிப்பாத்திரம் ஆற்றி, பல முறை சிறை சென்றிருக்கிறார்.

போராட்டங்கள்

தொகு
  • ஈழப் போரில் இலங்கைக்குத் துணை நின்ற இந்திய அரசை எதிர்த்த போராட்டம் - 2009
  • சேத்துப்பட்டு பகுதி மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்கள்
  • சிதம்பரம் கோயில் பிரச்சனை
  • சேத்துப்பட்டு பகுதி ரவுடிகள், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம்
  • காடம்பாறை நீர்த்தேக்க கட்டுமானப் பணி முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம்
  • முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு போராட்டம்

பொறுப்புகள்

தொகு
  • மாநிலப் பொருளாளர் - மக்கள் கலை இலக்கியக் கழகம்
  • வெளியீட்டாளர் - புதிய கலாச்சாரம் மாத இதழ்

புற்றுநோய்

தொகு

2011ம் ஆண்டு சனவரி மாதம் அவரை கணையப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது. கிட்டத்தட்ட ஒன்றேகால் ஆண்டுக்குப் பிறகு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கடும் வலியால் வேதனைப்படும் நிலையிலும் கலக்கமோ அச்சமோ சிறிதுமின்றி அமைப்பு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் பற்றிக் கேட்டறிதல், நமது பத்திரிகைகளைப் படித்தல், தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடுதல் என உறுதியையும் உற்சாகத்தையும் தோழர் வெளிப்படுத்தி வந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  • “வெங்காயத்தை உரிக்கும்போது எப்படி அருகில் இருப்பவர்களின் கண்களில் கண்ணீர் வருமோ, அதுபோல உங்களைத் தொட்டாலே ஆளும் வர்க்கம் கண்ணீர் விடச் செய்ய வேண்டும்.” - இளைஞர்களுக்கு
  • "உழைக்கும் மக்கள் இருக்கும்போது எந்த ஊரிலும் நாம் அந்நியரில்லை…"

இக்கட்டுரைகளையும் காணவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

இறப்புச் செய்தி

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சீனிவாசன்&oldid=3943019" இலிருந்து மீள்விக்கப்பட்டது