இரிடியம் உலாவி
இரிடியம் உலாவி (Iridium Browser) என்பது கட்டற்ற மென்பொருட்களால் உருவாக்கப்பட்ட இணைய உலாவிகளில் ஒன்றாகும். இது குரோமியம் உலாவி அடித்தளங்களையும், இன்னும் பிற புதிய நுட்பங்களையும்[1] கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் குரோம் தனிநபர் தகவல்களை அதிகம் திரட்டுவதால், அதைத் தவிர்க்க, அதன் நுட்பங்களைத் தன்னகத்தே உடைய, ஒரு இணைய உலாவி இல்லை என்ற குறையைத் தீர்க்கவும், இந்த உலாவி உருவாக்கப்பட்டுள்ளதாக, உரைக்கப்படுகிறது.[2]இது ஒரு பன்னியக்குதள மென்பொருள் ஆகும். டெபியன், மாக், வின்டோசு, ஓபன் சுசி(opensuse), பெடரோ, ஆர்எச்இல்(RHEL) போன்ற இயக்குதளங்களுக்கென தனித்தனி பொதிகளைப் பதிவிறக்கிம் செய்து கொள்ளலாம்.[3]கூகுள் குரோமின் நீட்சிகளை[4] இதனுள்ளும் நிறுவிக் கொள்ளலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://itsfoss.com/iridium-browser-review/?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=midnightbsd_founder_interview_snaps_mint_features_and_more_linux_stuff&utm_term=2018-02-28
- ↑ https://iridiumbrowser.de/
- ↑ https://iridiumbrowser.de/downloads/debian
- ↑ https://chrome.google.com/webstore/category/extensions