பன்னியக்குதளம்

பன்னியக்குதளம் (Cross-platform/multi-platform/platform-independent) என்ற பதமானது, மைக்ரோசாப்ட் விண்டோசு, லினக்சு, மாக் இயக்குதளம் போன்ற பல்வேறுபட்ட இயக்குதளங்களிலும் செயற்படக்கூடிய மென்பொருட்களைக் குறிப்பது ஆகும். ஒரே மென்பொருள் பல இயக்குதளங்களிலும் செயற்பட வல்லது என்றாலும், தங்களது இயக்குதளத்திற்கு ஏற்ப பொருத்தமான மென்பொருளை, ஒரு பயனர் தேர்ந்தெடுத்து முறைப்படி நிறுவிக் கொள்ள வேண்டும். மென்பொருள் வழங்குனரும், அதற்கேற்ற வகையில் தனித்தனி பொதிகளை வழங்குவர்.[1] கீழ்கண்டவற்றை எடுத்துக் காட்டுகளாகக் கொள்ளலாம். கணிய அடிப்படையில் பன்னியக்குதளம் என்பது ஒரு கணினியின் வன்பொருட்களையும், அதற்கேற்ற வகையில் நிறுவப்படும் மென்பொருட்களையும் ஒன்றிணைத்தே பொருட்கொள்ளப்படும்.[2]

பன்னியக்குதள மென்பொருட்கள் தொகு

பெயர் உரிமம் இயக்குதளம் விவரிப்பு
கிம்ப் GNU GPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப்பினை படவணு (Raster) வரைகலை வடிவத்திற்கு மாற்றும் திறனுள்ளது.
லிப்ரே ஆபீஸ் GNU LGPLv3 / MPLv2.0 லினக்சு, மேக், வின்டோசு பிடிஎப்பை உருவாக்கும் நிரல் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.PDF/A வசதியுமுள்ளது.
ஓப்பன் ஆபிசு GNU LGPLv3 லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப் நீட்சியை நிறுவ வேண்டும்.சில வரையெல்லைகளுடன் ஆவணத்துள் பயன்படுத்தலாம். PDF/A வசதியுமுள்ளது.
அடோப் ரீடர் வணிகமென்பொருள், இலவச மென்பொருள் அடோப்பின் பிடிஎப் வாசிப்பான்
எவின்சு GNU GPL குநோம் வகை லினக்சுகளில் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.
பயர் பாக்சு கட்டற்ற மென்பொருள் PDF.js.
ஆக்குலர் GNU GPL கே டீ ஈ இயக்குதளங்களில் இயல்பாக அமைந்து இருக்கும்.
PDF.js அப்பாச்சி அனுமதி யாவாக்கிறிட்டு வசதி, பிடிஎப் கோப்புகளை HTML5 க்கு மாற்றவல்லது.

மேற்கோள்கள் தொகு

  1. "Design Guidelines: Glossary". java.sun.com. பார்க்கப்பட்ட நாள் 2018-பிப்-27. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Platform Definition". The Linux Information Project. பார்க்கப்பட்ட நாள் 2018-பிப்-27. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னியக்குதளம்&oldid=2491820" இலிருந்து மீள்விக்கப்பட்டது