இரியாத்து கேலரி பேரங்காடி

சவுதி அரேபியாவில் உள்ளது

இரியாத்து கேலரி பேரங்காடி (Riyadh Gallery Mall) சவூதி அரேபியாவின் இரியாத் நகரத்தில் அமைந்துள்ளது. கிங் பகத்து சாலைக்கும் ஓலயா தெருவுக்கும் இடையே உள்ள சந்திப்பில் ஓர் உட்புற வணிக மையமாகவும், ஒரு வணிக வளாகமாகவும் இது இயங்குகிறது.[1] 2007 ஆம் ஆண்டு 154,740 சதுர மீட்டர் பரப்பளவில் திறக்கப்பட்ட இரியாத் கேலரி பேரங்காடி மறைந்த தொழிலதிபர் சேக் சலே அல்-இராய்கிக்கு சொந்தமானதாகும். சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள மிகவும் பிரபலமான பேரங்காடிகளில் இதுவும் ஒன்றாகும்.[2][3] பல சில்லறை விற்பனை நிலையங்கள், பெரும் சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் இங்குள்ளன. 2019 ஆம் ஆண்டு இப்பேரங்காடி ஏலம் விடப்பட்டது.[4]

இரியாத்து கேலரி பேரங்காடி
இருப்பிடம்:கிங் பகத் சாலை, இரியாத்து, சவூதி அரேபியா
அமைவிடம்
திறப்பு நாள்28 August 2007; 16 ஆண்டுகள் முன்னர் (28 August 2007)
கடைகள் எண்ணிக்கை170
தள எண்ணிக்கை4

வரலாறு தொகு

2006 ஆம் ஆண்டு சூலை மாதத்தின் பிற்பகுதியில், அல் இயசிரா செய்தித்தாள், இரியாத்து கேலரி பேரங்காடி அதன் நிறைவில் எண்பது சதவீதத்தை நெருங்கிவிட்டதாக அறிவித்தது. மேலும் சேக் சலே பின் அப்துல் அசீசு அல் ரச்கி வணிக மன்றம் 2007 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 28 அன்று வணிக வளாகத்தை தொடங்க முடிவு செய்தது.[5]

அமைப்பு தொகு

இரியாத்து கேலரி பேரங்காடியில் 4 தளங்கள் உள்ளன. இத்தளங்களில் மொத்தம் 170 கடைகள் இடம்பெற்றுள்ளன. அங்காடியில் நுழைவுக்கும் வெளியேறவும் 7 வாயில்கள் உள்ளன. 160 அறைகள் கொண்ட 4-நட்சத்திர தகுதியிலான உணவு விடுதி ஒன்றும் இதில் உள்ளடங்கியுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Saleh Al-Rajhi's Riyadh Gallery Mall to be auctioned tomorrow". ArgaamPlus (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
  2. "'Favorite' malls in Riyadh, Jeddah revealed". Arab News (in ஆங்கிலம்). 2017-05-24. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
  3. "Q Home Decor launches largest outlet at Riyadh Gallery". Arab News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
  4. "Late Saleh Al-Rajhi's Riyadh Gallery Mall to be auctioned soon". ArgaamPlus (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
  5. "Al-Jazirah". www.al-jazirah.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.