இரீட்டா சாகு

இரீட்டா சாகு (Rita Sahu) பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[3][4][5] இவர் 24 அக்டோபர் 2019 அன்று பிஜேபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் பிஜேப்பூரிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி என்றாலும், இரீட்டா பிஜு ஜனதா தளம் அரசியல்வாதி ஆவார்.[6][7][8] கணவரின் மரணத்திற்குப் பிறகு சாகு 28 பிப்ரவரி 2018 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பிஜேப்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 24 மே 2019 வரை பணியாற்றினார்.[9] 2019ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜேபூரிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன் பட்நாயக் பதவி விலகிய பின் மீண்டும் பிஜேபூர் தொகுதியிலிருந்து 16வது ஒடிசா சட்டமன்றத்திற்கு இரீட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] இரீட்டா சாகு இந்த இடைத்தேர்தலில் 97,990 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.[11]

இரீட்டா சாகு
கைத்தறி, நெசவு & கைவினைப்பொருட்கள் துறை அமைச்சர்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
2022 சூன் 5
பிஜேபூர்
பதவியில்
28 பிப்ரவரி 2018 – 24 மே 2019
முன்னையவர்சுபால் சாகு
பின்னவர்நவீன் பட்நாய்க்
பதவியில்
24 அக்டோபர் 2019 – முதல்
முன்னையவர்நவீன் பட்நாய்க்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூன் 1971[2]
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்

பிறப்பும் குடும்பமும்

தொகு

இரீட்டா சாகு சூன் 16, 1971-இல் பிறந்தார்.[12] இவரது தந்தையின் பெயர் லட்சுமி நாராயண் மகாராணா. இரீட்டா சுபால் சாகுவை மணந்தார்.[13] சுபால் ஒடிசா அரசியலில் இந்திய தேசிய காங்கிரசின் தீவிர தலைவராக இருந்தார். பிஜேபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 13, 14 மற்றும் 15வது ஒடிசா சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "Portfolios of newly-inducted ministers in Odisha". 5 June 2022 இம் மூலத்தில் இருந்து 6 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220706174605/https://www.prameyanews.com/portfolios-of-newly-inducted-ministers-in-odisha/. பார்த்த நாள்: 6 July 2022. 
  2. Rita Sahu (2019). "Odisha Assembly". odishaassembly.nic.in. https://odishaassembly.nic.in/memberprofile.aspx?img=1419. 
  3. "Odisha bypoll results: BJD's Rita Sahu wins Bijepur seat with record margin". Business Standard. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  4. "BJD's Rita Sahu secures impressive victory in Bijepur bypoll". The Hindu. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  5. "Bijepur bypoll result: BJD's Rita Sahu registers landslide victory with record margin". India Today. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  6. "Bijepur byelection results 2018: BJD candidate Ritu Sahu sweeps Odisha bypolls, decimates BJP and Congress". Zee News. 28 February 2018. பார்க்கப்பட்ட நாள் 27 October 2019.
  7. "BJD's Rita Sahu wins Bijepur Assembly bypoll in Odisha by 41,933 votes". Business Standard. 28 February 2018. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  8. "BJD's Rita Sahu Wins Bijepur In Odisha Assembly Bypoll". NDTV. 28 February 2018. பார்க்கப்பட்ட நாள் 27 October 2019.
  9. "BJD Wins Big in Bijepur Bypoll, Naveen Patnaik Says Sign of Things to Come in 2019". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  10. Mohammad, Suffian. "Bijepur bypoll result: BJD's Rita Sahu registers landslide victory with record margin" (in en). India Today. https://www.indiatoday.in/india/story/bijepur-bypoll-result-bjd-s-rita-sahu-registers-landslide-victory-with-record-margin-1612539-2019-10-24. பார்த்த நாள்: 7 November 2019. 
  11. "Odisha Bypoll Results 2019 : BJD Wins Bijepur Seat With Highest Ever Margin in History of State's Assembly Elections". News18. 24 October 2019. https://www.news18.com/news/india/odisha-bypoll-results-2019-bjd-wins-bijepur-seat-by-over-97000-votes-2360447.html. பார்த்த நாள்: 7 November 2019. 
  12. "Smt. Rita Sahu". odishaassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  13. "Late Subal Sahu". odishaassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  14. "Late Subal Sahu". odishaassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரீட்டா_சாகு&oldid=3908280" இலிருந்து மீள்விக்கப்பட்டது