இருநைட்ரோசில் இரும்பு அணைவு

இருநைட்ரோசில் இரும்பு அணைவுகள் (Dinitrosyl iron complexes) என்பவை உயிர் வேதியியலில் [Fe(NO)2(SR)2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒருங்கிணைவுச் சேர்மங்களைக் குறிக்கும். இரும்பு-கந்தகம் புரதங்கள் நைட்ரிக் ஆக்சைடுடன் சேர்ந்து ஈடுபடும் தரங்குறைப்பு வினையின் விளைவாக இரௌசின் எசுத்தர்களுடன் (Fe2(NO)4(SR)2) சேர்ந்து இவை கிடைக்கின்றன. பொதுவாக தயோலேட்டு ஈந்தணைவிகள் என்பவை சிசுட்டீன் அமினோ அமில கசடுகள் அல்லது குளூட்டாதயோன் எனப்படும் ஆக்சிசனேற்றி தடுப்பி என அறியப்படுகிறது. உயிர்வேதியியல் சமிக்ஞைகளாக ஆக்சிசனேற்ற அழுத்தத்திற்கு துலங்கலாகச் செயல்படுகின்றன என்பதால் இந்த உலோக நைட்ரோசில் அணைவுகள் NO உருவாக்கம் வெளிப்பட்டு மிகவும் அதிகமாக கவனத்தை ஈர்க்கின்றன. மேலும் இந்த எதிர்மின் அயனிகள் நாற்கோண வடிவத்தைக் கொண்டுள்ளன[1][2]

இருநைட்ரோசில் இரும்பு அணைவின் கட்டமைப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. Crack, J. C.; Green, J.; Thomson, A. J.; Brun, N. E. L. (2014). "Iron–Sulfur Clusters as Biological Sensors: The Chemistry of Reactions with Molecular Oxygen and Nitric Oxide". Accounts of Chemical Research 47: 3196–3205. doi:10.1021/ar5002507. 
  2. Jessica Fitzpatrick, Eunsuk Kim (2015). "Synthetic Modeling Chemistry of Iron–Sulfur Clusters in Nitric Oxide Signaling". Acc. Chem. Res. 48: 2453–2461. doi:10.1021/acs.accounts.5b00246.